கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான வானியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

பொறியியல் கல்லூரியில் கடந்த டிசம்பர் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மண்டல அளவிலான இரண்டு நாள் வானியல் பயிற்சி முகாமில், பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வானியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில், கடந்த டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், மண்டல அளவிலான வானியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தமிழில் அறிவியலை பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் தமிழ் பிரிவான அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், குமரகுரு பொறியியல் கல்லூரி சார்பில் இந்த வானியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் துறை தன்னார்வலர்கள் என இந்த நிகழ்வுக்கு வந்தவர்களை பல்கலைக்கழகத்தின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பால குருசாமி கலந்து கொண்டு, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

இதில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது, இதுபோன்ற அறிவியல் சார் பயிற்சி முகாம்கள் மூலமாக பள்ளி மாணவர்களிடையே வானியல் சார்ந்த அறிவினை ஏற்படுத்த முடியும் அதை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களால் தான் முடியும். கல்வி என்பது மதிப்பெண்களை தாண்டி புதுமைகளை படைப்பது பற்றியதாக இருக்க வேண்டும். 75 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி என்பது பல்வேறு மாற்றங்களை பெற்றிருந்தாலும் இன்னும் பல்வேறு இடங்களில் வளர்ச்சியை பெற வேண்டும்.

இது போன்ற பயிற்சி பட்டறைகள் மூலம் செயல்முறை அறிவை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சி துறையிலும் அவர்களை ஈடுபடுத்த ஊக்கப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுப்பிரமணி பேசியதாவது, பகல் நேர வானியலில் பல்வேறு கருத்துக்களை எளிமையாக செயல்பாடுகள் மூலம் பள்ளி வகுப்பறைகளில் செய்து காண்பிப்பதன் மூலமாக வானியலில் பள்ளி மாணவரிடம் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், பந்து கண்ணாடி, மாயக்கண்ணாடி, பூஜ்ய நிழல் தினம், உள்ளூர் நண்பகல் நேரம் கணக்கிடுதல், ராக்கெட் இயங்கும் தத்துவம்,கிரகணம் ஏற்படும் முறை ஆகியவற்றை செயல்பாடுகள் மூலம் எளிய துணைக் கருவிகளின் துணை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

இரவு வான் நோக்கும் நிகழ்ச்சியில் சந்திரன், வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களை தொலைநோக்கி வழியாக பங்கேற்பாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வில் சூரிய கடிகாரம், ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவற்றின் செயல்பாடுகள் மூலமாக செய்து காண்பிக்கப்பட்டு பங்கேற்பாளர்களும் அக்கருவிகளை செய்தனர். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் பிரமோத் கலந்துகொண்டு, பறவைகளுக்கும் வானியலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறினார்.

இதேபோல், இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி முனைவர் இளங்கோவன், செயற்கைக்கோள்கள் பற்றியும், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே எளிமையான செயற்கைக்கோள்களை வடிவமைப்பது எவ்வாறு என்பது குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இயற்பியல் துறை தலைமை அலுவலர் முனைவர் எழிலரசி, உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி, அறிவியல் தன்னார்வலர் வாசுதேவன், காஞ்சி டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், ஜெகதீஸ்வரன் மற்றும் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இறுதியாக இயற்பியல் துறை தலைவர் அருள் நன்றி கூறினார். நிகழ்வில் பங்கேற்பாளர்களாக தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாள் பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...