கோவை குமரகுரு கல்வி குழுமத்தில் தொழில்நுட்ப கலாச்சார விழாவின் போஸ்டர் அறிமுகம்

கோவை குமரகுரு கல்விக்குழுமத்தில் தொழில்நுட்ப கலாச்சார விளையாட்டு விழாவிற்கான போஸ்டர் கல்லூரி மாணவர்கள் முன்பு வித்தியாசமான முறையில் ட்ரோன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.


கோவை: கோவை குமரகுரு கல்வி குழுமத்தில் தொழில்நுட்ப கலாச்சார விழாவின் போஸ்டர் வித்தியாசமான முறையில் ட்ரோன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக குமரகுரு கல்வி குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவையில் உள்ள குமரகுரு கல்விக் குழும வளாகத்தில் உள்ள ஆர்ப்பில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் யுகத்தின் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது.



குமரகுரு யுகத்தின் 11வது பதிப்பு துவக்கத்தைக் குறிக்கும் விதமாக, ஒரு ட்ரோன் துடிப்பான வண்ணங்களுடன் வந்து யுகம் 2023 போஸ்டரை வெளியிட்டது.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மாணவர்கள், காலநிலை நடவடிக்கை மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பூமியின் பஞ்சபூதங்களை கருப்பொருளாகக் கொண்டு 11வது பதிப்பு வெளியிடப்பட்டது.

டீம் எவோக்கின் உன்னதமான நடன நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு சிறப்பு அமைத்தது, பேண்ட் அக்ரதாவின் இசை நிகழ்ச்சி, குமரகுரு தற்காப்பு கலை மையத்தின் சிலம்பம் நிகழ்ச்சி ஆகியவை மாணவர்களிடையே யுகம் நோக்கிய ஓர் ஆர்வத்தை தூண்டியது.

யுகத்தில், ஒவ்வொரு ஆண்டும் 150+ கல்லூரிகளில் இருந்து 15,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்கிறார்கள், இது மாணவர்களின் அசாதாரண திறன்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த ஒரு தளமாக விளங்குகிறது.

யுகம், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றின் களங்களில் இருந்து, நிகழ்வுகளின் பேரலையால் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, தொடர்ந்து அமைதியையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், உத்வேகத்தையும் கொண்டு வந்துள்ளது.

யுகமானது, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது, அவர்களின் திறமைகளை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவது மற்றும் சமூகத்திற்கு பங்களிப்பது போன்ற முக்கிய செயல்களை ஆற்றி வருகிறது.

யுகம் அறிவு, கருணை, நம்பிக்கை ஆகியவற்றை ஊக்குவிப்பதோடு இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களிடையே கலாச்சார பின்னணியில் வரம்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்களின் இடைவிடாத முயற்சிகளால், நிகழ்வு திட்டமிடல் முதல் மேலாண்மை வரை, யுகம் தொடர்ந்து நவீன மயமாக்கப்பட்ட புதுப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...