உலக உணவு பரிசை பெற்ற பயிர் மேம்பாட்டு துறை மூத்த விஞ்ஞானி கோவிந்தராஜுக்கு கோவை குமரகுரு வேளாண் கல்லூரியில் பாராட்டு விழா

உணவு மற்றும் விவசாயத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் 2022ஆம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்ற முனைவர் கோவிந்தராஜுக்கு கோவை குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை: பயிர் மேம்பாட்டு துறையின் மூத்த விஞ்ஞானி முனைவர் கோவிந்தராஜ் 2022 ஆம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றுள்ளார்.

உணவு மற்றும் விவசாயத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் இந்த பரிசு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர்கள் குறிப்பாக குறிப்பாக முத்து தினை குறித்த ஆராய்ச்சி மற்றும் சிறந்த தலைமைத்துவ பண்பிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயப் பின்னணியில் இருந்து வரும் முனைவர். கோவிந்தராஜ், உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்களின் மூலம், கிராமப்புற சமூகங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை நேரடியாக நிரூபித்துள்ளார்.

பயிர்களை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவங்கள், ஊட்டச்சத்து மேம்பாட்டு உத்திகள், செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் ஆகிய எண்ணற்ற ஆய்வுகளை குறிப்பிட்டும், எளிய கிராமத்தில் பிறந்து, சர்வதேச சாதனையை எட்டி இருக்கும், அவரது ஈர்க்கக்கூடிய பயணமானது, மாணவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆய்வு மேற்கொள்ளும் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் உலக உணவு பரிசை பெற்ற முனைவர் கோவிந்தராஜ்-க்கு ஹார்வெஸ்ட் பிளஸ், பயோவர்சிட்டி இன்டர்நேஷனல் மற்றும் CIAT கூட்டணியில் குமரகுரு வேளாண்மை கல்லூரியின் தாளாளர் பிரகாஷ் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

குமரகுரு வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் பி.ஜே.பாண்டியன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பேராசிரியை முனைவர் எஸ்.ஹேமலதா வரவேற்புரையும், நிர்வாக அலுவலர் சரவணன் நன்றியுரையும் வழங்கினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...