கோவை வேளாண் பல்கலை. - பெங்களூரு மத்திய பட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு மத்திய பட்டு வாரியம் இடையே முதுகலை மாணவர்களின்‌ பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிக்கை.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு மத்திய பட்டு வாரியம் இடையேயான மாணவர்களின்‌ நலனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதுகலை மாணவர்களின்‌ பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பலகலைக்கழகம்‌‌ மற்றும்‌ பெங்களூரு மத்திய பட்டு வாரியம்‌, இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

பெங்களூருவில்‌ உள்ள மத்திய பட்டு வாரியத்தின்‌ மூன்று பிரதிநிதிகள்‌ ஒப்பந்தம்‌ கையெழுத்திடுவதற்காக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தனர்‌.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில்‌ மற்றும்‌ பெங்களூரு மத்திய பட்டு வாரியத்தின்‌ விஞ்ஞானி முனைவர்‌ எஸ்.மந்திரமூர்த்தி ஆகியோர்‌ தங்கள்‌ அறிமுக உரையில்‌, இந்தக்‌ கல்விக் கூட்டுறவின்‌ இன்றியமையாமை குறித்து பேசினர்.



இதனையடுத்து வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌, முனைவர்‌ இரா.தமிழ்வேந்தன் மற்றும்‌ பெங்களூரு மத்திய பட்டு வாரியத்தின்‌ இயக்குனர்‌ (தொழில்நுட்பம்‌) மற்றும்‌ உறுப்பினர்‌ செயலாளர்‌ (பொறுப்பு), முனைவர்‌ பி.டி.ஸ்ரீனிவாசா ஆகியோர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌, முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களின்‌ முன்னிலையில்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

பல்கலைக்கழக அதிகாரிகளான, முதன்மையர்‌ (வனவியல்‌) முனைவர்‌ கே.டி.பார்த்திபன், இயக்குனர்‌ (பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையம்‌) முனைவர்‌ ஆர்‌.ரவிகேசவன, தீ வனப்பயிர்கள்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ கே.என்‌. கணேசன்‌ மற்றும்‌ பெங்களூரு மத்திய பட்டு வாரியத்தைச்‌ சேர்ந்த விஞ்ஞானி முனைவர்‌ ஜி.ஆர்‌.மஞ்சுநாதா ஆகியோர்‌ கையெழுத்திடும்‌ நிகழ்வில்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்‌.

முன்னதாக, மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ பட்டு வளர்ப்புத்துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ எஸ்‌. மணிமேகலை வரவேற்றார்‌.

இறுதியாக, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, வேளானர்‌ பூச்சியியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முனைவர்‌ எஸ்‌.வி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...