கோவையில் பார்க் கல்வி குழுமத்தில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சி கல்லூரியை திறந்து வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கணியூரில் உள்ள பார்க் குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சி கல்லூரியின் திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கல்லூரியை திறந்து வைத்து பாராட்டினார்.



கோவை: கோவை மாவட்டம் கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சி கல்லூரியின் திறப்பு விழா கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர்.பிரபுதாசன் முன்னிலை வகித்தார். அவர் தனது உரையில் இந்த பயிற்சி கல்லூரியில் கொடுக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து, பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. P.V. ரவி சிறப்புரையாற்றினார். மேலும், பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr.அனுஷா ரவி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது, அனைத்து துறையின் பயிற்சி கல்லூரிகளை துவங்கி கோவை மாவட்டத்தை கல்விக்கான இலக்காக ஏற்படுத்த வேண்டும் என்றார்.



இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது, செய்தி வாசிப்பாளர், நிருபர், துணை எடிட்டிங், கைபேசி ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஒப்பனைக்கான பயிற்சி கல்லூரியை கோவையில் துவங்கியதற்கு பாராட்டுக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிற்சி கல்லூரியின் கோவை கிளை ஒருங்கிணைப்பாளர் முகமத் இஸ்மாயில் வரவேற்பு உரையாற்றினார். இந்த பயிற்சி கல்லூரியின் கோவை கிளையின் தலைவர் பொற்கொடி செல்வராஜ் நன்றி உரையாற்றினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...