கோவை வேளாண் பல்கலை. - PSGR கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உயிர்த்‌ தொழில்நுட்பம்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ புதிய ஆராய்ச்சி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டில்‌ இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளன.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் மற்றும் PSGR கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி இடையே பல்வேறு ஆராய்ச்சிகளின் இணைந்து செயல்படுவது என புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ‌கையெழுத்தாகி உள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உயிர்த்‌ தொழில்நுட்பம்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ தொலையுணர்வு தொழில்நுட்பம்‌ ஆகியவற்றில்‌ புதிய ஆராய்ச்சிகளும்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ திறன்‌ மேம்பாடு, தொழில்‌ முனைவோர்‌ பயிற்சி ஆகிய வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டில்‌ இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சார்பில்‌, பதிவாளர்‌ முனைவர்‌ ஆர்‌.தமிழ்வேந்தன்‌,‌ பி.எஸ்‌.ஜி.ஆர்‌. கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி சார்பில்‌, முனைவர்‌ பி.மீனா‌, வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணை வேந்தர்‌ முனைவர்‌ வி.கீதாலட்சுமி முன்னிலையில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையயெழுத்திட்டனர்‌.

வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்குநர்‌ முனைவர்‌ இ.சோமசுந்தரம்‌ இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...