தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வருங்கால விவசாய பொறியியல் தொடர்பான தேசிய கருத்தரங்கம்‌

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் "Build Back Wiser-Engineer the Future Agriculture" என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்தின்‌ தொடக்க விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வருங்கால விவசாய பொறியியல் தொடர்பான தேசிய கருத்தரங்கம்‌ நடைபெற்றது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், "Build Back Wiser-Engineer the Future Agriculture" என்ற தலைப்பில் AgriTech Manifest’ 22 என்னும் தேசிய கருத்தரங்கத்தின்‌ தொடக்க விழா நடைபெற்றது.

பொறியியல்‌ துறையில்‌ உள்ள 250 க்கும்‌ மேற்பட்ட ஆராயச்சியாளர்கள்‌ (மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்), தொழில்முனைவோர்கள், நிறுவனதாரர்கள்‌, மாணவ மாணவியர்கள்‌ மற்றும்‌ விவசாய பெருமக்கள்‌ என பலரும் இந்த நிகழ்ச்சியில்‌ பஙகேற்றனர்‌.

வேளாண்மை மற்றும்‌ அதன்‌ முன்னேற்றத்தைப்‌ பற்றி ஆலோசனை செய்வது மற்றும்‌ கருத்துகளை பரிமாறுவதன்‌ மூலம்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையில்‌ ஒரு பெரும்‌ முன்னேற்றத்தைக்‌ காண இந்நிகழ்வு ஒரு அடித்தளமாக திகழ்ந்தது.

மண்‌ மற்றும்‌ நீர்வளப்‌ பாதுகாப்பு பொறியியல்‌, பண்ணை இயந்திரவியல்‌ மற்றும்‌ சக்தி பொறியியல்‌, உணவு பதன்செய்‌ பொறியியல், புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ ஆகிய நான்கு துறைகளின்‌ கருப்பொருள்களில்‌ இக்கருத்தரங்கம்‌ நடந்தது. இக்கருத்தரங்கத்தில் சுமார்‌ 200 ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ விளக்கத்திற்காக பெறப்பட்டன.



இக்கருத்தரங்கத்தில்‌ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்‌ மற்றும்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ரவிராஜ்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

M/s Leggo Mobility என்ற தனியார்‌ நிறுவனத்தின்‌ இயக்குனர்‌ மற்றும்‌ இணை நிறுவனர்‌ ராஜகோபால்‌ அவர்கள்‌ இந்த கருத்தரங்கத்தில்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்‌. தனியார்‌ நிறுவனங்களில்‌ பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை பற்றியும்‌, “2030 Vision — Zero Emission; Zero Cancellation” பற்றியும்‌ உரையாற்றினார்‌.

மேலும்‌ இக்கருத்தரங்கத்தின்‌ ஆயவுக்‌ கட்டுரை நூல்‌ வெளியிடப்பட்டது. மாணவியர்கள் ஒருங்கிணைப்பாளர்‌ தேவிதர்வினி தொடக்க விழாவின்‌ போது வரவேற்புரை ஆற்றினார்‌ மற்றும்‌ மாணவ ஒருங்கிணைப்பாளர்‌ பரத்‌ நன்றியுரை ஆற்றினார்‌.

AgriTech Manifest 22 இன்‌ ஒருங்கிணைப்பாளர்‌, முனைவர்‌. பாலாஜி கண்ணன்‌ மற்றும்‌ பி. டெக்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ பட்டப்படிப்பு மாணவர்களின்‌ சிறப்பான திட்டமிடுதலால்‌ இக்கருத்தரங்கானது வெற்றிகரமாக முடிவடைந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...