கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில்‌ வருடாந்திர ஆய்வு மாநாடு - 317 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி கழகத்தில் நடைபெற்ற 2022க்கான வருடாந்திர ஆய்வு மாநாட்டில், பல்வேற் ஆய்வாளர்களின்‌ 317 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.‌



கோவை: கோவை பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தில்‌ நேற்றைய தினம் வருடாந்திர ஆய்வு மாநாடு நடைபெற்றது.

இதுதொடர்பாக கற்பகம் உயர்கல்வி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தில்‌ நேற்றைய தினம் (10.12.2022) வருடாந்திர ஆய்வு மாநாடு நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு, கற்பகம்‌ உயர்கல்விக்கழக வேந்தர்‌ முனைவர்‌ க.ராமசாமி முன்னிலை வகித்தார்‌.

இந்த நிகழ்ச்சியில், தொடக்க உரையாற்றிய துணைவேந்தர்‌ முனைவர்‌ ப. வேங்கடாசலபதி‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும் வருடாந்திர ஆய்வு மாநாடு, ஆய்வாளர்களின்‌ ஆய்வுத்திறன்‌ மேம்பாட்டுக்கு உறுதுணை செய்வதை விளக்கினார்‌.



இதனையடுத்து கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ டாக்டர்‌ இராச.வசந்தகுமார்‌‌ தலைமையுரையாற்றிய போது, ஆய்வாளர்களின்‌ வளர்ச்சியே, நாட்டின்‌ வளர்ச்சி. அத்தகைய உயர்ந்த நோக்கத்திலான தொடர்‌ கற்றல்‌ முயற்சியும்‌, புதியவற்றைக்‌ கண்டடைகின்ற ஆர்வமும்‌, ஆய்வு மனப்பான்மையும்‌, சமூகப் பொறுப்புணர்வும்‌ ஆய்வாளர்களுக்குப்‌ பல்வேறு துறைகளிலும்‌ புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்குவகைச்‌ சுட்டிக்காட்டினார்‌.



இதனை தொடர்ந்து விழாவில்‌, சென்னை சி.எஸ்‌.ஐ.ஆர்‌-சி.எல்‌.ஆர்‌.ஐ அறிவியல்‌ மையத்தின்‌ தலைமை ஆய்வறிஞர்‌ டாக்டர்‌ பி.சண்முகம்‌‌, ஆய்வாளர்களின்‌ 317 ஆய்வுக் கட்டுரைகள்‌ அடங்கிய ஆய்வுக் கோவையை வெளியிட்டு ஆய்வுரை வழங்கினார்‌. 



அப்போது அவர் பேசியதாவது, ஆழ்ந்த உற்றுநோக்கல்‌, தெளிவாக உணர்தல்‌ மற்றும்‌ புதியவற்றை உருவாக்கல்‌ ஆகியவை சிறந்த ஆய்வாளரின்‌ அணுகுமுறைகளாகும்.

ஆய்வாளர்கள்‌, சமுதாயப் பொறுப்புணர்வுடன்‌ மேற்கொள்கின்ற பயன்பாட்டு ஆய்வுகள்‌, காலத்தை வென்று அவர்களை வாழச்செய்கின்றன. இன்றைய நாளில்‌ ஆய்வுலகில்‌ பெண்களின்‌ பங்களிப்பை மேம்படுத்துவதே, சமுதாய மேம்பாட்டுக்கு வகைசெய்யும்‌ என்று வலியுறுத்தினார்‌.

முன்னதாக, விழாவில்‌ ஆய்வுப்பிரிவின்‌ இயக்குநர்‌ பி.வி.பிரதீப்‌‌ வரவேற்புரை வழங்கினார்‌. ஆய்வுப்பிரிவின்‌ இணை இயக்குநர்‌ ப. சுரேஷ்‌ பிரபு நன்றி கூறினார்‌.



பல முதன்மையர்களும்‌, பேராசிரியர்களும்‌, ஆய்வாளர்களும்‌ இந்த மாநாட்டில்‌ கலந்து கொண்டனர்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...