கோவை வேளாண் பல்கலையில் மாநில அளவிலான தரக் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சி - துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழக அங்கீகாரம்‌ பெறுவதற்கான தரக் காப்புறுதி குறித்த ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுப்பு கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ அங்கீகாரச்‌ செயல்முறை மூலம்‌ விவசாயக்‌ கல்வியில்‌ தர உத்தரவாதம்‌ மற்றும்‌ சிறந்து விளங்குவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது.

இந்தச்‌ செயல்பாட்டில்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ அதன்‌ கல்லூரிகளுக்கான, பல்கலைக்கழக நிலை, கல்லூரி நிலை மற்றும்‌ பட்டப்படிப்பு நிலை அங்கீகார செயல்முறைக்கு இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகம்‌ மூலம்‌ விண்ணப்பித்து வருகிறது.



இதையொட்டி, அங்கீகாரம்‌ பெற வேளாண்மைக்‌ கல்வியில்‌ ஒரு நாள்‌ மாநில அளவிலான தரக்‌ காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (05.12.2022) கோவையில்‌ உள்ள முதுகலை வேளாண்‌ புலத்தின்‌ மூலம்‌ பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவா்‌.வெ.கீதாலட்சுமி‌ துவக்கி வைத்தார்‌.

கோவை வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆராய்ச்சி இயக்குநர்‌ டாக்டர்‌. ரவீந்திரன்‌ தலைமையில்‌ நடைபெற்ற குழு விவாதத்தில், டாக்டர். பி. ரங்கசாமி, டாக்டர்‌. விஸ்வநாதன்‌ மற்றும்‌ டாக்டர்‌. சிவகாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகத்தின் முதன்மை விஞ்ஞானியும்,‌ மண்டல ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்‌. சி.கே. நாராயணா, அங்கீகாரத்தின்‌ விழைவு என்ற தலைப்பில்‌ விரிவுரை ஆற்றினார்‌ ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னிலை அதிகாரியுமான (NAHEP) டாக்டர்‌. பி. ராமசுந்தரம்‌, விவசாயம்‌ கல்வியில்‌ தர உத்தரவாதம்‌ என்ற தலைப்பில்‌ உரையாற்றினார்‌. மேலும், கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனர்‌ டாக்டர்‌. ஜி. ஹேமபிரபா சிறப்புரையாற்றினார்‌.

முன்னதாக முதுகலை வேளாண்‌ முதன்மையர் டாக்டர்‌.ந.செந்தில்‌ அனைவரையும் வரவேற்றார்‌. தொடக்க உரையை கோயம்புத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ தேர்வுக்‌ கட்டுப்பாட்டாளர்‌ டாக்டர்‌ பாலசுப்ரமணி நிகழ்த்தினார்‌.



இந்த நிகழ்ச்சியில்‌, அனைத்து 14 உறுப்புக்‌ கல்லூரிகள்‌, 28 இணைப்புக்‌ கல்லூரிகள்‌, அனைத்து‌ பல்கலைக்கழக அலுவலர்கள்‌ மற்றும்‌ முதன்மை வளாகத்தில்‌ உள்ள துறைத்‌ தலைவர்கள்‌ பங்கேற்றனர்‌. சுமார் 100 பங்கேற்பாளர்கள்‌ பங்கேற்று உரையாடினர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...