கோவை வேளாண்‌ பல்கலை.-யில்‌ வேளாண் வணிகம்‌, சந்தை நுண்ணறிவு குறித்த 10 நாள் பயிற்சி - பல்வேறு மாநில பல்கலை., கல்லூரிகள் பங்கேற்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழக நிதியுதவியுடன் நவ.30 ஆம் தேதி தொடங்கிய 10 நாள் பயிற்சியில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலை மற்றும் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிகம்‌, சந்தை நுண்ணறிவு உள்ளிட்டவை தொடர்பான 10 நாள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககம்‌ சார்பில், “வேளாண்மை வணிகம்‌, சந்தை நுண்ணறிவு மற்றும்‌ உற்பத்திச்‌ சங்கிலி” என்ற தலைப்பில்‌ பத்து நாட்கள்‌ குறுகிய கால பயிற்சி நடைபெறவுள்ளது.

புதுதில்லியில்‌ உள்ள இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழக நிதியுதவியுடன்‌ கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, உத்தரபிரதேசம்‌, தமிழ்நாடு மாநில வேளாண்‌ பல்கலைக்கழகங்கள்‌, கால்நடை மருத்துவப்பல்கலைக்‌ கழகங்கள்‌ மற்றும்‌ இணைக்‌ கல்லூரிகளைச்‌ சேர்ந்த 19 பேர் பங்கேற்று உள்ளனர்.



தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர்கள்‌, பார்ம்‌ அகைன்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌, எஸ்‌.கே.எஸ்‌. ஸ்கில்‌ பாஸ்ட்டெனெர்ஸ்‌, மிஸ்ட்‌ சொலுஷன்ஸ்‌ போன்ற தொழில்‌ நிறுவனங்களில்‌ இருந்து பாட நிபுணர்களாக சுமார்‌ 35 பேர்‌ பயிற்சியளிக்கின்றனர்‌.

இந்த பயிற்சியின்‌ தொடக்க விழாவில்‌ வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி ஆய்வுமைய இயக்குனர்‌ முனைவர்‌ டி.சுரேஷ்குமார்‌, முதல்வர்‌ (வேளாண்மை) முனைவர்‌ என்‌.வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர்‌ பேசியதாவது,

விவசாயிகள்‌ மற்றும்‌ அதன்‌ பங்குதாரர்கள்‌ புதிய அணுகுமுறைகளைப்‌ பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில்‌ இருப்பதால்‌, இந்த பயிற்சி அவசியம்‌. மேலும்‌, இன்றைய சூழ்நிலையில்‌ சந்தை நுண்ணறிவின்‌ முக்கியத்துவத்தையும்‌, விவசாயிகளின்‌ வருமானத்தை அதிகரிக்க இப்பயிற்சி உதவும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கடந்த 20 ஆண்டுகளாக சந்தை நுண்ணறிவு மற்றும்‌ பிற வேளாண்‌ வணிக நடவடிக்கைகளில்‌ முன்னோடியாக திகழ்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதனை தொடர்ந்து, துணைவேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி தமது துவக்க உரையில் பேசியதாவது,‌ விவசாயத்தை வேளாண்‌ வணிகமாக மாற்ற வேண்டியது‌ அவசியம். மேலும், உற்பத்தி‌ சங்கிலி தொழில்‌ நுட்பத்தின்‌ மூலம்‌ தயாரிப்புகளை கண்டு பிடிப்பதன்‌ முக்கியத்துவம்‌, உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ அவர்கள்‌ விற்கும்‌ மற்றும்‌ வாங்கும்‌ தயாரிப்புகள்‌ பற்றிய நுண்ணறிவுகளைப்‌ பெற உதவும்.

விவசாயத்தில்‌ பிளாக்செயின்‌ தொழில்நுட்‌பத்தின்‌ பயன்பாடு, பண்ணை விளைபொருட்களின்‌ நம்பகத் தன்மையைப்‌ பற்றி நுகர்வோருக்கு அதிகளவில்‌ தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்‌.

முன்னதாக, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்குநர்‌ முனைவர்‌ இ.சோமசுந்தாம்‌ வரவேற்பு உரையையும்‌, பாடநெறி பயிற்சி பற்றிய அறிமுகக் குறிப்பையும்‌ நிகழ்த்தினார்‌. இறுதியாக, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்கக பேராசிரியர்‌ முனைவர்‌. S. சுந்தரேஸ்வரன்‌ நன்றியுரை வழங்கினார்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...