கோவை பார்க் கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


கோவை: பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் கணியூர் வளாகத்தில் நடைபெற்றது.



பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்து கொண்டார்.



கவுரவ விருந்தினர்களாக கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கணியூர் மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் பிரபு வாஷிங் மசின்ஸ் உரிமையாளர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் லக்ஷ்மணன், கடந்த ஆண்டு மாணவர்கள் புரிந்த சாதனைகள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றதையும் பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் ஆண்டாள் பிரியதர்ஷினி, மாணவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற பெற்றோரை கதாநாயகன், கதாநாயகியாக கருதி அவர்களின் தியாகங்களை நினைவில் கொண்டு வாழ்வில் உயர வேண்டும் என கூறினார்.



தனது பேச்சால் மாணவர்களை சிந்திக்க வைத்த கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி, மாணவர்களை தங்களது பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள செய்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...