கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4-வது பட்டமளிப்பு விழா

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து 685 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.


கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.



விழாவில் டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் தலைமைத் திறன் அதிகாரியுமான எஸ்.வி.நாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆயிரத்து 685 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். மேலும் 41 பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக அளவில் 7 தங்கப்பதக்கங்களை பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் எஸ்.வி.நாதன் பேசியதாவது:

சமூகத்தில் ஒரு தீப்பொறியாக இருக்க வேண்டும் என்றும் பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எண்ணம் மற்றும் மனப்பான்மையை முதன்மையாக எதிர்பார்ப்பதாக கூறிய அவர், நல்ல அணுகுமுறை, எதையும் நேர்மறையாக மாற்றும் விஷயம்,மதிப்புகளையும் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தொழில்துறையில் அசாதாரணமான பணிகளைச் செய்யும் நபர்கள் தொழில்துறையை உயர்மட்ட நிலைக்கு மாற்றுவதாக கூறிய அவர், எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

எந்தத் தொழிலிலும் பணிபுரியும் போது ஊதியத்தில் கவனத்தை செலுத்தாமல் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த வேன்டும் என்று எஸ்.வி நாதன் கூறினார். ஊதியம் பெறுவதன் மூலம் மட்டுமே பந்தயத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறிய அவர், ஒருவரை எல்லா அம்சங்களிலும் மேம்படுத்துவதன் மூலம், தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

வேலை கிடைப்பதற்கு கல்விதான் அடிப்படை என்றும் ஆனால் கல்வியைத் தாண்டி உழைக்கும் துறையில் நல்ல, நேர்மறையான மனதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்றவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், உலகில் வெற்றியாளர்களின் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், வாழ்க்கையில் வேறு யாருக்காவது சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார். கலாச்சாரத்தின் மதிப்பு குறித்து பேசிய அவர், எப்போதும் வெளியில் தரத்தை காட்டி தரமாக பேச வேண்டும் என்று கூறினார்.

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது, அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேன்டும் என்றும் எஸ்.வி நாதன் தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர்.பழனியம்மாள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...