கோவை கற்பகம் நர்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா - மாநகர காவல் ஆணையர் பங்கேற்பு

கோவை கற்பகம்‌ நர்சிங்‌ கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வரவேற்பு விழாவில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.


கோவை: கற்பகம்‌ நர்சிங்‌ கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள்‌ வரவேற்பு விழா கல்லூரி அரங்கில்‌ மிகச்சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்ரு கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ முனைவர் வசந்தகுமார்‌ தலைமை தாங்கினா. முதலாமாண்டு மாணவர்களை கல்லூரியின்‌ முதல்வர்‌.முனைவர்‌.சுதா வரவேற்றார்‌.



விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ பாலகிருஷ்ணன், செவிலியர்‌ என்பது பணி மட்டுமல்ல ஒரு சேவை என்றும்‌ மனிதநேயத்தோடு நோயுற்றவர்களை காக்கும்‌ அறம்‌ சார்ந்த பணிதான்‌ செவிலியர்களுடையநு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நர்சிங் மாணவர்கள்‌ தாய்மொழி, ஆங்கிலம்‌ மட்டுமல்லாமல்‌ ஏதாவது ஒரு நாட்டின்‌ மொழியையும்‌ கூடுதலாகக்‌ கற்றுக்‌ கொண்டால்‌ அவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள்‌ உலகம்‌ முழுவதும்‌ காத்துக்கிடப்பதாக தெரிவித்தார்.

நர்சிங்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ பெரும்பாலும்‌ மிகவும் எளிமையான பின்னனியில்‌ இருந்து தான்‌ வருவதாக கூறிய ஆணையர் பாலகிருஷ்ணன், அவ்வாறு வரும்‌ செவிலியர்கள்‌ ஏதோ கிடைத்த வேலை போதும்‌ என்று நினைக்கக்கூடாது என்றும் செளகரியம்‌ என்னும்‌ வட்டத்தில்‌ இருந்து வெளியேவந்து தங்‌களுடைய தலைமைப்‌ பண்பை எளர்த்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் வளர்ந்த நாடுகளில்‌ இருக்கும்‌ பெரும்பான்மையான மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ இந்தியாவைச்‌ சார்ந்தவர்களாகவும்‌ குறிப்பாக தென்னிந்தியாவைச்‌ சர்ந்தவர்களும்தான்‌ இருப்பதையும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த விழாவில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தாளாலர்‌ தமயந்தி, மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ முனைவர்‌.ஆதி பாண்டிய, பேராசிரியர்கள்‌, மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...