கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


கோவை: ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இதில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினருமான ரத்தினசபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 109 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், 2 எம்.பில் மற்றும் 17 பி.ஹெச்.டி ஆராய்ச்சியாளர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.



மேலும் பல்கலைக்கழக அளவில் 39 ரேங்க் பெற்றவர்களை கௌரவித்து சான்றதில்கள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய ரத்தினசபாபதி, கல்வி அறிவை மாணவர்கள் சரியான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என கூறினார். முன்னேற்றத்திற்கான தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், தொழில் அல்லது வியாபாரம் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

வெற்றிக்கான முக்கிய காரணி, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் நோக்கி நாம் எடுக்கும் மன அணுகுமுறை தான் என்றும் சரியான முன்னோக்கிப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்றும் ரத்தினசபாபதி கூறினார்.

உற்பத்தித்திறனும்,விஷயங்களைச் செய்ய கோட்பாடு அல்லது திட்டமிடல் போதாது என கூறிய அவர், சோம்பேறித்தனத்தை முறியடித்து,சிந்தித்து எதையும் செய்யத் தொடங்க வேண்டிய காலம் இது என்றும் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா, கல்லூரி முதல்வர் டாக்டர். ஜெகஜீவன், முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர்.சுந்தரராமன், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...