கோவை வேளாண் பல்கலை.-யில் இன்று இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (26.11.2022) முதல் தொடங்கியுள்ளது.

இந்த கலந்தாய்வில் முதல் கட்டமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.

இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் முதன்முதலில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் உள்ள விருப்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் வரும் 30ஆம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நகர்வு முறையே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. மேலும் இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேவைப்பட்டால் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும்.

இதனை தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் 2,495 அரசு கல்லூரிகளில் (உறுப்பு கல்லூரி) 12 பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும். இணைப்பு கல்லூரிகளில் உள்ள இளமறிவியல் (மேதமை) வேளாண்மை மற்றும் இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை பட்டப்படிப்புகளுக்கான 2,771 இடங்கள் நிரப்பப்படும்.

மேலும் தகவல்களுக்கு 0422-661134, 0422-6611346 ஆகிய தொலைபேசி எண்களுக்கு வார நாட்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கலந்தாய்வு குறித்த விரிவான அட்டவணை மற்றும் விவரங்கள் www.tnau.ucanapply.com என்ற வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...