கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தமிழ் மன்ற துவக்க விழா மற்றும் குறள் மலை சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை தமிழ் மன்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான ஜெ.அருள்பிரகாஷ், கல்லூரி பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் மன்ற துவக்க விழா மற்றும் குறள் மலை சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ஜே.அருள்பிரகாஷ் கலந்து கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழ் மன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்லூரி பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். இப்பருவம்தான் மாணவர்கள் தங்களின் திறமையை பயன்படுத்தும் காலமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், மாணவர்களின் ஆற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் குறள் மலைச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து, குறள் மலைச் சங்கத்தின் தலைவர் P.ரவிக்குமார் ஏற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் R.ஜெகஜீவன் தலைமை வகித்து பேசினார். மேலும் இந்த நிகழ்வில், தமிழ் மன்ற லோகோ வெளியிடப்பட்டது.

தொடர்ந்து மொழித் துறையின் டீன் R.விஜய சாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக தமிழ்மன்ற தலைவர் மூன்றாம் ஆண்டு பயோடெக்னாலஜி மாணவர் எப்.எஸ்.சாம்பில்பிரைட் வரவேற்று பேசினார். முடிவில் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மனைவி ஏ.ஷிவானி நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...