கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் அதிநவீனப் பகுப்பாய்வுக் கருவி ஆய்வகம்

அதிநவீனப் பகுப்பாய்வு கருவி ஆய்வகத்தின் மூலம் உலோக அறிவியல்-பொறியியல் துறையில் உயர் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக குமரகுரு தொழிட்நுட்பக் கல்லூரி தெரிவித்துள்ளது.



கோவை: இந்தியாவின் தொழில் நுட்பத்துறையில் உயர் ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை நிதியுதவி வழங்குகிறது. அத்துறையிலிருந்து தனது வளாகத்தில் உயர் ஆய்வுக்கட்டமைப்பை உருவாக்க 60 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி.



இந்த ஆய்வுக்கட்டமைப்பின் மூலம் உலோக அறிவியல் - பொறியியல் துறையில் உயர் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.



கடந்த 15-ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் இயல்பியல் ஆய்வுகளுக்கான நுட்பமான கருவிகள் இடம் பெற்றுள்ளன.



பெர்கின் எல்மர் ப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர், பெர்கின் எல்மர் மற்றும் காண்டாக்ட் ஆங்கிள் மீட்டர் முதலான கருவிகளைக் கொண்டு உலோக அறிவியல் பொறியியலிலும், உயிரி தொழில் நுட்பத்துறையிலும் சுற்றுச்சூழல் அறிவியலிலும் உயர் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என குமரகுரு கல்லூரி தெரிவித்துள்ளது.



இந்த ஆய்வுகள் மூலம் நம்நாட்டில் கிடைக்கும் இயல்பியல் – வேதியியல் பொருட்களின் பண்புகளைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அதனால் புதிய தொழில் குழுமங்கள் தொடங்கப்படும் என்றும் கல்லூரி தெரிவித்துள்ளது. சிறுகுறு தொழில்களின் வளர்ச்சியின் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு செய்வார்கள் என்று அக்கல்லூரி தெரிவித்துள்ளது.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் பொறியியல், தொழில் நுட்பம், மேலாண்மையியல், மனித நேயம் போன்ற பிறதுறைகளிலும் கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்புக்காகக் கேமரூன் நாட்டில் உள்ள பிகே போகாம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளது. அப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மேற்கு ஆப்பிரிக்க வங்கியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் போண்ட்ஜோ கைலாரண்ட் முன்னிலையில் ஆப்ரிலாந்து குழுமத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டாக்டர் பவுல் கே போகாம் கையெழுத்திட, குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி குமரகுரு நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர் பரிமாற்றம், பாடத்திட்ட மேம்பாடு, கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் கேமரூன் நிறுவனம் தனது ஆதரவை வழங்குகிறது. பிகே போகாம் நிறுவனத்தில் ஆய்வகங்களை உருவாக்கவும், கல்விசார்ந்த அமைப்புகளை வலுப்படுத்தவும் கேமரூன் நிறுவனத்திற்கு உதவப்படும் என்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தெரிவித்துள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...