இந்தியர்கள் வாசிப்பில் முதலிடம் வகிக்கிறார்கள் - கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரி நூலகர் பி.சிவகுமார்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற நூலக வாசகர் மன்ற திறப்பு விழாவில் பேசிய அவர், இந்தியர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 10.4 மணிநேரம் படிக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக கூறினார்.



கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலக வாசகர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியின் நூலகர் பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையில் அவர் பேசியதாவது,இந்தியர்கள் இப்போது செய்தித்தாள்கள்மட்டும் இன்றிபல்வேறு இதழ்கள் மற்றும் புத்தகங்கள்படிக்க தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் வாரத்தில் சராசரியாக 10.4 மணி நேரம் படிக்கின்றனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 8 மணி நேரம், அமெரிக்கா 5.4 மணி நேரம், இங்கிலாந்து 5.18 மணி நேரம் மற்றும் ஜப்பான் 4.06 மணி நேரம் முறையே ஒரு வாரத்தில் படிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தியர்கள் செய்தித்தாள்களைப் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டனர்.



இப்போது படிப்படியாக செய்தித்தாள்களுடன் மற்ற புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிக்கத் தொடங்கி உள்ளனர் . நமது நாட்டினர்தினசரி செய்தித்தாள் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

தகவல் என்பது மனித உயிர் வாழ்வதற்கான ஆறாவது ஆதாரம், தகவல் இல்லாமல் நாம் சமூகத்தில் வாழ முடியாது. ஒவ்வொரு நபருக்கும் அன்றாட வாழ்க்கைக்கு தகவல் தேவை. நாம் இப்போது தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். இப்போது தகவல் மூலம் வருமானம் கிடைக்கிறது. அறிவுப் பொருளாதாரம் உலகை ஆள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வாசகர் மன்ற திறப்பு விழா நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.ஜெகஜீவன் தொடங்கி வைத்தார். உதவி நூலகர் முனைவர் டி.விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். மேலும்ஆங்கில ஆசிரியர் ஆர்.சரண்யஸ்ரீ இறுதியாக நன்றியுரை வழங்கினார்.

இந்த வாசகர் மன்ற திறப்பு விழா நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...