2021-22 கல்வியாண்டில் +2வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியை தொடராத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை உயர்கல்வித்துறை வரும் நவம்பர் 18 வரை நீட்டித்துள்ளதால் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.



சென்னை: 2021-22ஆம் கல்வியாண்டில் +2வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ள 777 மாணவர்களுக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021-22 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சியடைந்த 777 மாணவர்கள் 2022- 23ஆம் ஆண்டில் தங்கள் உயர்கல்வியை தொடரவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மாணவர்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததாலும், தங்களது குடும்ப நிதி நிலை காரணமாகவும், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்பது போன்ற பல்வேறு காரணங்களால் தங்களது உயர்கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது, அனைத்து அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌, மாணவர்கள்‌ சேர்க்கைக்கான கால அவகாசத்தை உயர்கல்வித்துறை நவம்பர் 18 ஆம் தேதி (18.11.2022) வரை நீட்டித்துள்ளது.

இந்நிலையில், உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...