கோவை குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் ஸ்வாகதம் விழா - ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்பு

கோவை குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெற்ற ஸ்வாகதம் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர்.



கோவை: புதிய மாணாக்கர்கள் நுழைவை ஸ்வாகதம் என்ற பெயரில் விழாவாக நடத்தித் தொடங்குவது குமரகுரு தொழில்நுட்பக்கல்லூரியின் மரபாக இருந்து வருகிறது.



இந்த ஆண்டுக்கான ஸ்வாகதம் விழா சிறப்பாக நடைபெற்றது.



விழாவில் ஆயிரத்து 350-க்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் பெற்றோரோடு கலந்துகொண்டனர்.



இளங்கலைப் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் டி சரவணன் வரவேற்றார்.



விழாவிற்கு தலைமை தாங்கிப் பேசிய குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி கே கிருஷ்ணராஜ் வாணவராயர், மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் நமது நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் விதமாக அமைய வேண்டும் என கூறினார்.



உலகமயமாக்கப்பட்ட சூழலில் பிள்ளைகளை வளர்ப்பதில் பெரிய சவால்களைப் பெற்றோர் எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நம் காலத்தில் உருவாகியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் உலகத்தின் போக்கை மாற்றிப்போட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே அதனைக் கவனத்தில் கொண்டு நமது பிள்ளைகளுக்கு நாட்டின் கலை, பண்பாட்டுக்கூறுகள் மீது பற்றும் நம்பிக்கையும் உண்டாகுமாறு வளர்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



பெற்றோர்கள் நமது பண்பாட்டைப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதன் மூலமே நாட்டை மேம்படுத்த முடியும் என்றும் கூறினார்.



அவரைதொடர்ந்து பேசிய குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், தற்போதுள்ள சூழலில் மதிப்பெண்களின் தேவை, தனித்திறன்கள் உருவாக்கம், வேலைவாய்ப்புக்கான இடங்களைக் கண்டறிதல் போன்றவை முக்கியமானவைகளாக உள்ளதாக கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...