தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.



கோவை:கோவை கருமத்தம்பட்டியில் தொடங்கப்பட்ட தமிழகத்தின் முதல் சுயநிதி பொறியியல் கல்லூரியான தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 34 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் Tamilnadu School of Architecture கல்லூரியின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரியின் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் 863 இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான பாலசுப்பிரமணியன், மனிதனின் ஆயுள் அதிகமாக அதிகமாக பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தொழில் வாய்ப்புகளும் பெருகும் என்று கூறினார். வளரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்த டிஜிட்டல் உலகில் காணாமல் போய்விடுவோம் என்று NOKIA மற்றும் KODAK நிறுவனங்களை உதாரணமாக காட்டி பட்டதாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், டாக்டர் ஆறுமுகம், பொறியாளருக்கு கனவே கண்டுபிடிப்பின் ஆணிவேர் என்று கூறினார். பல்துறை பொறியியல் அறிவே இன்றைய கால சூழலுக்கு உகந்தது என கூறிய அவர், எனவே துறை சார்ந்த அவற்றை கற்றுக்கொண்டு மாணவர்கள் தங்களது வாழ்வில் உயர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



பட்டமளிப்பு விழாவில் பார்க் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...