கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நவம்பர்‌ 10ம் தேதி இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இளமறிவியல்‌ பட்டப்படிப்புக்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீடூ மூலம் ‌நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்‌ பட்டியல் விபர்ங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நவம்பர்‌ மாதம்‌ 10 நடைபெற உள்ளது.

இது குறித்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் உள்ள தகவல்:-

இந்த கலந்தாய்வில் மாற்றுத்‌ திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும்‌ முன்னாள்‌ ராணுவ வீரர்களின்‌ வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில்‌ நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்‌ பட்டியல்‌ https://tnau.ucanapply.com/ என்ற இணையதள முகவரியில்‌ பதிவிடப்பட்டுள்ளது.

இத்தகவல்‌ மாணவர்களது மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம்‌ அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்‌ விபரங்களுக்கு இணையதள வாயிலாகவும்‌ மற்றும்‌ 0422-6611345, 0422-6611346 என்ற தொலைபேசி உதவிச்‌ சேவை எண்களை தொடர்பு கொண்டும்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

பிற பொது கலந்தாய்விற்கான தகவல்களை https://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...