கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ப்ராஜெக்ட் 'போலீஸ் அக்கா' நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற ப்ராஜெக்ட் "போலீஸ் அக்கா" விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா பங்கேற்று மாணவிகளுக்கு சமூக ஊடகங்களை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியில் கோவை மாநகர காவல்துறை மற்றும் கல்லூரியின் பெண்கள் முன்னேற்ற பிரிவு சார்பில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கான ”போலீஸ் அக்கா” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சைபர் கிரைம் என்பது சமீபத்திய பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில் சிறுமிகள் விவரம் இல்லாமல் சிக்கிக் கொள்கின்றனர்.

மாணவிகளிடையே இதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்கள், மின் அஞ்சல்கள் மற்றும் பிற வழிகள் மூலம் பெண்கள் துன்புறுத்தப்படுவதால் மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலரை நியமித்து, அவர் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே வேளையில், ரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பேணுவதற்காக, நகர காவல்துறை இந்த முயற்சியைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் அதற்கான தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டது, இது பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளவும் தீர்வு காணவும் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர் பொன் நித்யா ஆகியோர் காவல்துறை அக்கா மற்றும் அதன் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.



இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.ஜெகஜீவன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என பலரும் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...