சர்வதேச முன்னோடி பல்கலைகழகங்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.



கோவை: சர்வதேச முன்னோடி பல்கலை கழகங்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலக உணவு விருது வழங்கும் அமைப்பு, கடந்த அக்டோபர் 19-20 ஆகிய நாட்களில் அமெரிக்காவில் உள்ள அயோவா மாநிலத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லெட்சுமியை கௌரவ விருந்தினராக வரவேற்றனர். மேலும் இவ்விழாவில் துணை வேந்தர் நார்மன் போர்லாக், பன்னாட்டு கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்.

இந்த வெளிநாட்டு பயணத்தின்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனை அமைப்பு (CGIAR) மற்றும் அமெரிக்காவிலுள்ள பில் மற்றும் மெலிண்டா கேட்எம் அறக்கட்டளை.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) / மிச்சிகன் மற்றும் கான்சாஸ் மாநில பல்கலை கழகங்கள் போன்ற முன்னோடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சென்று மாணவர்கள் மற்றும் பல்கலைகழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள். மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பரிமாற்றம் மூலம் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்கள், பல்கலைகழக ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.



இது தவிர, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் க்ரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ப்ரானிஷ்வீக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். நெதர்லாந்திலுள்ள புவி தகவல் மற்றும் கண்காணிப்பு மையம்.



ட்வெண்டே பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று தாவர அறிவியல், மணி மற்றும் நீர் பாதுகாப்பு, ட்ரோன் பயன்பாடுகள், விவசாய பயன்பாடுகளில் புவி சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதுற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பயிலும் மாணவர்கள் திறன் மேம்படுவதற்காக மேற் குறிப்பிட்ட அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்கள் பயிற்சிப் படிப்பை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்தில் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புவி தகவல் மற்றும் கண்காணிப்பு மையம், ட்வென்டே பல்கலைக்கழகம் மற்றும் சென்னையை சர்வதேச ஸ்டார்ட் அப் பார்ம்வைஸ் ஆகியவற்றுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்காக, டிஜிட்டல் மேப்பிங், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள் மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

துணைவேந்தரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் வேளாண் பல்கலைக்கழகம் வரும் காலத்தில் பல வேளாண் திட்டங்களை பல்கலைக்கழக வளர்ச்சிக்காக பன்னாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...