கோவை பார்க் கல்வி குழுமங்களின் 21ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - கைக்குழந்தையுடன் பட்டம் பெற்றுச்சென்ற மாணவிக்கு பாராட்டு

கோவை கருமத்தம்பட்டியில் பார்க் கல்வி குழுமங்களின் 21ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், இந்தோ ஜெர்மல் நிறுவன பொது மேலாளர், Dr. பன்னீர்செல்வம் ராமசாமி கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.


கோவை: கோவை பார்க் கல்வி குழுமங்களில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி, பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, வணிக மேலாண்மை ஆகிய கல்லூரிகளின் 21ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கருமத்தம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மிக பிரமாண்டமான விழாவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் Dr.அனுஷா ரவி தலைமை வகித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தோ ஜெர்மல் நிறுவன பொது மேலாளரும், ஆக்ராவின் சிறு குறு நிறுவனங்களின் முன்னாள் முதன்மை இயக்குனருமான Dr. பன்னீர்செல்வம் ராமசாமி கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கு பெற்ற சுற்றுசூழல் பொறியியல் துறை பட்டதாரி சுமித்ரா தனது கைக் குழந்தையுடன் வந்து சான்றிதழை பெற்றுக் கொண்டார். இந்த செயலின் மூலமாக தனது முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு எதுவும் தடை கிடையாது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவடைந்தது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...