கோவையில் மாநில கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் கூட்டம் நடைபெற்றது

கோவையில் இன்று நடைபெற்ற மாநில கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் கூட்டத்தில் மேற்கு மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்தார்.


கோவை: மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழக அரசு டெல்லி உயர் நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் மற்றும் கல்வித்துறை வல்லுநர்கள் கீழ் உயர் மட்ட குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த குழு தமிழக கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் செயல் அதிகாரிகளுடன் மாநில கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை கேட்பதுடன் கலந்து ஆலோசனைகளை மேற்கொண்டு அவற்றை வைத்து மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரிக்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரையறை குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் டி. முருகேசன் ஆகியோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

இவ்வாறு அவர்களின் கருத்துக்களை நேரில் பெற்று இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் பேசியதாவது:-

பொறியியல் கல்லூரியின் பாடத்திட்ட வரையறை என்பதில் மத்திய அரசின் வெளிப்பாடுகளுக்கும் மாநில அரசின் வெளிப்பாடுகளுக்கும பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. இதில் பொறியியல் கல்லூரி எவற்றை பின்பற்றுவது என்கிற கருத்து வேறுபாடு சமீப காலமாக இருந்து வருகிறது. இது குறித்த தெளிவான அறிக்கை தேவை என்றார்.

இவ்வளவு பேசிய அவர் தன்னுடைய ஆலோசனைகளை மாநில கல்விக் கொள்கை வரையறை செய்கின்ற குழு தலைவரிடம் சமர்ப்பித்தார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் தலைவரும் எக்ஸெல் கல்லூரியின் தலைவர், டாக்டர் நடேசன், கற்பகம் பொறியியல் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி, முருகையா, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் தலைவர் சுப்ரமணியம், ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின், தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...