கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டில் பட்டப்படிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறம் பட்டமளிப்பு விழாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை அமைப்பாளர் ஆர். வேலுசாமி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வான்வழி முன்னெச்சரிக்கை திட்ட இயக்குநர் எஸ்.கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றனர்.


கோவை: சரவணம்பட்டியில் அமைந்துள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டில் பட்டப்படிப்புகளை நிறைவுசெய்த 2013 பேருக்குப் பட்டங்களை வழங்கும் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (அக்டோபர் 29, 2022) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவானது மூன்று அமர்வுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அமர்வுகளில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் பட்டச்சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

காலை 10 மணிக்குத் தொடங்கும் முதல் அமர்வில் 7 துறைகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கர்கள் தங்கள் பட்டச் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

பிற்பகல் அமர்வு மதியம் 1 மணிக்குத் தொடங்கும். அதில் மீதமுள்ள 6 துறைகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் பட்டங்களைப் பெறுவார்கள்.

எம்பிஏ, எம்சிஏ மாணாக்கர்கள் மாலை 5 மணிக்குத் தொடங்கும் அமர்வில் பட்டங்களைப் பெறுவார்கள் என குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அறிவித்துள்ளது.

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினார்:-

குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரையுடன் பட்டமளிப்பு விழாவை தொடங்குவார்.

அவரைத் தொடர்ந்து குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டி. சரவணன், நிறுவனத்தின் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் விளக்கும் அறிக்கையை வாசிப்பார்.

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரையுடன் பட்டங்களை வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

காலை அமர்விற்கான பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் சக்தி மிக்க டீஸல் இயந்திரத்தின் தலைமை அமைப்பாளரான ஆர். வேலுசாமி கலந்துகொண்டு சிறப்பு செய்வார் அவரது வருகையும் உரையும் பட்டம் பெறும் இளையோர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும்.

பிற்பகல் அமர்வில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர், வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் (AWACS) திட்ட இயக்குநராகவும், தலைமைப் பொறியாளராகவும் சிறப்பான பங்களிப்புச் செய்தவர் டாக்டர் எஸ். கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குவார். அவரது பங்கேற்பும் வருகையும் இளம் பட்டதாரிகளுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக அமையும்.

என கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அறிவிப்பு கொடுத்துள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...