கோவை வேளாண் பல்கலை.-யில் வேளாண்‌ இடுபொருள்‌ பட்டயப்படிப்பு துவக்க விழா

வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண்‌ இடுபொருள்‌ பட்டயப்படிப்பு துவக்க விழாவில் பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, இடுபொருள் பட்டயப்படிப்பு மாணவர்கள்‌ அனைவரும்‌, விவசாயிகள்‌ நச்சுத்‌ தன்மையற்ற வேளாண்‌ பொருட்களை உற்பத்தி செய்யவும்‌, விவசாயிகளின்‌ வாழ்வாதாரம்‌ உயரவும்‌ துணை புரியவேண்டும் என்று கூறினார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ திறந்தவெளி மற்றும்‌ தொலைதூரக்‌ கல்வி இயக்ககத்தில்‌ துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில், வேளாண்‌ இடுபொருள்‌ பட்டயப்படிப்பு துவக்க விழா நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை(24.09.2022) தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, திறந்தவெளி மற்றும்‌ தொலைதூரக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பில் வேளாண் இடுபொருள்‌ பட்டயப்‌ படிப்பு துவக்க விழா பொன்விழா அரங்கில்‌ நடைபெற்றது.



இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌.வெ.கீதாலட்சுமி பேசிய போது, கிராமங்களில்‌ விவசாயிகளுடன்‌ நல்ல தொடர்பில்‌ இருப்பவர்கள்‌ இடுபொருள்‌ விற்பனையாளர்கள் தான். இவர்கள்‌ வழங்கும்‌ பரிந்துரையை ஏற்று அவ்வாறே விவசாயிகளும்‌ உரம்‌ மற்றும்‌ பூச்சி மருந்துகளை வாங்கிச்‌ சென்று வயல்களில்‌ பயன்படுத்துகின்றனர்‌.

எனவே இடுபொருள்‌ விற்பனையாளர்கள்‌ பூச்சி மற்றும்‌ நோய்களை பற்றிய நன்கு அறிந்தவர்களாகவும்‌ சரியான அளவில்‌ உரங்களைப்‌ பரிந்துரை செய்வதில்‌ திறன்பெற்றவர்களாகவும்‌ இருக்க வேண்டும்‌. இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ வேளாண் இடுபொருள்‌ பட்டயப்படிப்பைத்‌ தொடங்கி நடத்தி வருகிறது.

இப்பாடத்தை பயிலும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ விவசாயிகள்‌, நச்சுத்‌ தன்மையற்ற வேளாண்‌ பொருட்களை உற்பத்தி செய்யவும்‌, இந்தியா உணவு உற்பத்தியில்‌ சிறந்து விளங்கவும்‌, விவசாயிகளின்‌ வாழ்வாதாரம்‌ உயரவும்‌ துணை புரியவேண்டும். மண்‌ மற்றும்‌ நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்‌

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குநர்‌, இயற்கை வளமேலாண்மை இயக்குநர்‌, பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ மற்றும்‌ விதை நுட்ப மைய இயக்குநர்‌ ஆகியோர்‌ அந்தந்த துறைகளில்‌ கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை இப்பட்டயப்படிப்பில்‌ கலந்துகொண்ட மாணவர்களுக்கு எடுத்துக்‌ கூறினர்‌.

முன்னதாக தொலைதூரக்‌ கல்வி இயக்குநர்‌ முனைவர்‌. ப. பாலசுப்ரமணியம், வரவேற்புரை ஆற்றினார்‌. இறுதியாக இடுபொருள்‌ பட்டயப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌. ௧.செல்வராசு நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...