ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளி விழா: தொழில்துறை 5.0 குறித்த ஒரு நாள் மாநாடு

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எவ்வாறு தொழில்துறை 5.0 மூலம் சூப்பர் ஸ்மார்ட் சமுதாயத்தில் வாழவும் வேலை செய்யவும் போகிறோம் என்பது குறித்து வல்லுனர்கள் எடுத்துரைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது வெள்ளி விழாவில், தொழில்துறை 5.0 ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.



குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக, தொழில்துறை மற்றும் கல்வித்துறையை இணைக்கும் வகையில் தொழில்துறை 5.0 பற்றிய ஒரு நாள் மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி 25வது ஆண்டு வெள்ளி விழா லோகோவை அறிமுகப்படுத்தினார்.

மேலும் இவ்விழாவில், பெங்களூரு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அகாடமிக் இன்டர்ஃபேஸ் புரோகிராம் (ஏஐபி) பொது மேலாளர் மற்றும் தலைவர் சந்திரா கொடூரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.



இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தொழில் நிறுவனங்களில் புதிய புரட்சி வரவுள்ளது. இது 5.0 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில்துறை மற்றும் பல துறைகளில் பல பரிமாணங்களைக் கொண்டுவரப் போகிறது.

உலகம் தற்போது அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. நாம் இப்போது ஒரு மேம்பட்ட உலகில் வாழ்கிறோம். இதனால், தொழில்நுட்பம் மக்களை ஒரே இடத்தில் அமர்ந்து சிந்திக்க வைக்கிறது. தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித நேயத்தை மற்றும் வளத்தினை பாதிக்கக் கூடாது.

எல்லோரும் எங்கிருந்தும் எதையும் அணுகலாம். அனைத்து தொழில் புரட்சிகளும், மனிதர்களை இயந்திரங்கள் பயன்பாட்டினால் மாற்றுகின்றன. ஆனால், புதிய தொழில்துறை புரட்சியானது இயந்திரம் மற்றும் மனிதர்கள் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய தொழில்துறை புரட்சிகள் மூலம் சூப்பர் ஸ்மார்ட் சமுதாயத்தில் வாழவும் வேலை செய்யவும் போகிறோம். இந்த 5.0. மனித வளத்தினை பாதிக்காமல், மனிதர்களின் வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தவும் உள்ளது. மேலும், வேலைகள் மற்றும் வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட சமூக இலக்குகளை அடைவதற்கு, வழிமுறைகளை வகுக்க உள்ளது.

மனிதர்கள் இயந்திரங்களுடன் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது. புதிய தொழில்துறை புரட்சியானது, மனிதர்களை எந்த செயலிலும் உட்படுத்தும், மிக உயர்ந்த நன்மைகளைப் பெறுவதற்கு குறைந்த வளங்களைப் பயன்படுத்தும் திறமையான செயல் முறையை உருவாக்குகிறது.

5.0 காரணமாக, நாம் தொழில்துறை பிளாக்செயின், ட்ரோன்கள், எக்ஸோஸ்கெலட்டன்கள், சேர்க்கை தொழில்நுட்பம், 5G மற்றும் அதற்கு அப்பால் மற்றும் கலவையான யதார்த்தத்தைப் பெறப் போகிறோம். தொழில்துறையினர், பல்வேறு அமைப்புகளின் பல்வேறு புதிய புதுமையான பலன்களைப் பெற்று மனிதர்களுக்குப் பல வழிகளில் உதவப் போகிறார்கள், இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், ஜிங்கா நிறுவன முதுநிலை மேலாளர் CA.கார்த்திக் சந்திரசேகர், ஜீ.எம்.ஆர் ஏர்போர்ட் லிமிட்டட் நிறுவன வளர்ச்சி & டேலண்ட் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் கண்ணன் மனோகரன், என்,ஐ.சி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குனர் கோபி சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பேசினர்.



ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் ஆர்.ஜெகஜீவன் வரவேற்றார்.



நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி, பல்வேறு கல்லூரிகளில் முதல்வர்கள், பேராசிரியர்கள், தொழில்துறை நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...