கோவை கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ சிறப்பு பட்டிமன்றம், போட்டிகள் என களைகட்டியது 75வது சுதந்திர தின விழா..!

கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌ தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்‌. பின்னர், சுதந்திர இந்தியாவின்‌ அறிவியல்‌ வளர்ச்சியில்‌ இளைஞர்களின்‌ பங்கு மேம்பட்டு உள்ளதா? இன்னும் மேம்படுத்தப்பட வேண்டுமா? என்ற தலைப்பில்‌ சுதந்திர சிறப்பு பட்டிமன்றம்‌ நடைபெற்றது.


கோவை: 75வது சுதந்திர தின விழாவானது, கோவை, ஒத்தக்கால்‌ மண்டபம்‌ பகுதியில் உள்ள கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இவ்விழாவில்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌. P. விஜயகுமார்‌ தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்‌.



இதனை தொடர்ந்து, சுதந்திர இந்தியாவின்‌ அறிவியல்‌ வளர்ச்சியில்‌ இளைஞர்களின்‌ பங்கு மேம்பட்டு உள்ளதா? இன்னும் மேம்படுத்தப்பட வேண்டுமா?என்ற தலைப்பில்‌ சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்‌ நடைபெற்றது.

இந்த பட்டிமன்றத்தை முனைவர்‌. கே. ராமகிருஷ்ணன்‌ அவர்கள்‌ தலைமையேற்று நடத்தினார்‌. இவ்விழாவில்‌, துறை தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவ மாணவியர்கள்‌ பங்கு பெற்றனர்‌.



மேலும்‌ சுதந்திர தின விழாவை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு கல்லாரியின்‌ முதல்வர்‌ பரிசுகளை வழங்கி கெளரவித்தார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...