கோவை TNAU-வின் சார்பாக 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசு நடுநிலைப் பள்ளியில்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன..!

கட்டுரை, பேச்சு, ஓவியம்‌ மற்றும்‌ வினாடி வினா போட்டிகள்‌ நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளிலும்‌ நான்கு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரைபயிலும்‌ 115 பள்ளி குழந்தைகள்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌, சார்பாக 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அரசு நடுநிலைப் பள்ளியில்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன.



75வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு சுதந்திரப்போராட்டத்திற்குப் பாடுபட்டவர்களின்‌ வரலாற்றை நினைவு கூறும்‌ விதமாக, சுதந்திர தின அமுத பெருவிழாவை வடவள்ளியில்‌ இயங்கும்‌ தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்‌ வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌, சார்பாக 10.08.2022 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்‌ பள்ளி மாணாக்கர்களுக்குக் காலை 10.00 மணிமுதல்‌ கட்டுரை, பேச்சு, ஓவியம்‌ மற்றும்‌ வினாடி வினா போட்டிகள்‌ நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளிலும்‌ நான்கு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரைபயிலும்‌ 115 பள்ளி குழந்தைகள்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்றனர்‌. சுமார்‌ 500 குழந்தைகளுக்கு இனிப்புகள்‌ வழங்கப்பட்டது.



இறுதியாக மாலை 4 மண்‌ அளவில்‌ வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ௮. ரவிராஜ்‌ சிறப்புரை வழங்கி, போட்டிகளில்‌ வெற்றி பெற்ற அனைத்து மாணாக்கர்களுக்குப் பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌.



மேலும்‌ இந்நிகழ்ச்சியில்‌ பள்ளியின்‌ உதவி தலைமை ஆசிரியர்‌ சுந்தரேசன்‌ வாழ்த்துரை வழங்கினார்‌. இக்கல்லூரியின்‌ மாணவர்‌ மன்ற ஆலோசகர்‌ முனைவர்‌ பாலாஜி கண்ணன், உதவி பேராசிரியர்‌ முனைவர்‌ மோகன குமார்‌ மற்றும்‌ மூன்றாம்‌ ஆண்டு மாணவர்கள்‌ இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...