கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

இந்த விழாவில், சமுதாய கல்லூரியை சேர்ந்த 205 மாணவ, மாணவியரும், கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், இளங்கலை பட்ட படிப்பில், 147 மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில், 21 மாணவர்களும் என, மொத்தம், 373 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.

கோவை: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலை., வேந்தர் தியாகராசன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர்.

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், கல்லூரி செயலர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் சேதுராஜன் முன்னிலை வகித்தார். பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார்.

இதில், அவினாசிலிங்கம் பல்கலை., வேந்தர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

இந்த விழாவில், சமுதாய கல்லூரியை சேர்ந்த 205 மாணவ, மாணவியரும், கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், இளங்கலை பட்ட படிப்பில், 147 மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில், 21 மாணவர்களும் என, மொத்தம், 373 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...