கோவை குமரகுரு கல்லூரியில் 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா..!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2,927 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.


கோவை: குமரகுரு நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா 06 மற்றும் 07 ஆகஸ்ட், 2022 ஆகிய நாட்களில் மூன்று அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில், 2019 மற்றும் 2020 தொகுதியைச் சேர்ந்த 2900 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.

குமரகுரு வளாகத்தில் உள்ள இராமணந்த அடிகளார் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிஇ, பிடெக், பாடப்பிரிவு மாணவர்களுக்கு முதல் நாளன்றும், எம்இ, எம்டெக், எம்பிஏ மற்றும் எம்சிஏ பாடப்பிரிவு மாணவர்களுக்கு இரண்டாம் நாளன்றும் பட்டம் வழங்கப்பட்டது.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் மாணவர்களை வரவேற்று பேசினார். நிறுவனத்தின் இணை தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் தனது பட்டமளிப்பு உரையில், வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து அது தரும் பாடத்தை கற்று முன்னேறும் லட்சியத்துடன் இருப்பது ஒரு சிறந்த வெற்றிக்கு சரியான வழித்தடமாக இருக்கும் எனக் கூறினார்.

மேலும், நிறுவனர் டாக்டர்.நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் அஞ்சலி செலுத்தும் வகையில், பட்டதாரிகளை அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் நோக்கத்துடன் இணைத்து, தேசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்குவித்தார். குமரகுரு நிறுவனங்களின் தாளாளரும் பட்டமளிப்பு விழாவின் தலைவருமான எம். பாலசுப்ரமணியம் பட்டங்களை வழங்கினார்.

இந்த இரண்டு நாட்களில் மொத்தம் 2927 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெரும் 1296 மாணவர்களில் 217 பேர் முதல் வகுப்பில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். அதேபோல், 2020-ம் ஆண்டில் தேர்ச்சி பெரும் 1422 மாணவர்களில் அதில் 272 பேர் முதல் வகுப்பில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...