சேலம் சந்தியூரில்‌ உள்ள வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தில் இணைய வழி கருத்தரங்கு..!

சேலம்‌ மாவட்டம்‌ சந்தியூரில்‌ உள்ள வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தில்‌ "வானிலை சார்ந்த வேளாண்‌ உற்பத்தி மற்றும்‌ தொழில்‌ நுட்பங்கள்‌" குறித்த இரண்டு நாள்‌ இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.


சேலம்‌: சேலம்‌ மாவட்டம்‌, சந்தியூர்‌, வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தில்‌ "வானிலை சார்ந்த வேளாண்‌ உற்பத்தி மற்றும்‌ தொழில்‌ நுட்பங்கள்‌" குறித்த தேசிய அளவிலான இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.

சேலம்‌ மாவட்டம்‌ சந்தியூரில்‌ உள்ள வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தில்‌ 02.08.2022 மற்றும்‌ 03.08.2022 ஆகிய இரண்டு நாட்கள்‌ "வானிலை சார்ந்த வேளாண்‌ உற்பத்தி மற்றும்‌ தொழில்‌ நுட்பங்கள்‌" குறித்த இரண்டு நாள்‌ இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.

முனைவர்‌.இரா.ஜெகதாம்பாள்‌, திட்ட ஒருங்கிணைப்பாளர்‌, வேளாண்மை அறிவியல்‌ நிலையம்‌, சந்தியூர்‌, சேலம்‌ மாவட்டம்‌ அவர்கள்‌ வரவேற்புரை வழங்கினார்‌. அதை தொடர்ந்து வேலு, வேளாண்‌ துணை இயக்குனர்‌, பனமரத்துப்பட்டி, வாழ்த்துரை வழங்கினார்‌.

நாகராஜன்‌, முன்னிலை விவசாயி ஓமலூர்‌, சேலம்‌ மாவட்டம்‌, சந்தியூர்‌, வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தின்‌ மாவட்ட வேளாண்‌ வானிலை மையத்தின்‌ மூலம்‌ கொடுக்கப்படும்‌ வானிலை முன்னறிவிப்பைச் சார்ந்த வேளாண்‌ ஆலோசனைகளைப் பயன்படுத்தி அறுவடை காலத்தில்‌ மழையினால்‌ ஏற்பட இருந்த பயிர்‌ சேதத்தைத் தவிர்த்து அதிகலாபம்‌ அடைந்ததை சக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்‌.

முனைவர்‌.சுப.ராமநாதன்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, முதன்மை ஒருங்கிணைப்பாளர்‌ (GKMS & DAMU) காலநிலை ஆராய்ச்சி மையம்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ கோயம்புத்தூர்‌, வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையத்தில்‌ செயல்படும்‌ வட்டார அளவிலான வானிலை முன்னறிவிப்பையும்‌ மற்றும்‌ கிராம வாரியாக கொடுக்கப்படும்‌ வானிலை முன்னிறிவிப்பையும்‌ பற்றி எடுத்துரைத்தார்‌.

முனைவர்‌.கே.கே.சிங்‌ இயக்குநர்‌, இந்திய வானிலை துறை, புதுடெல்லி, இந்திய வானிலை துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ DAMU & GKMS திட்டத்தின்‌ செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார்‌. முனைவர்‌.சே.பாலச்சந்திரன்‌, மண்டல வானிலை துறையின்‌ செயல்பாடுகளைப்‌ பற்றி எடுத்துரைத்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்க கல்வி இயக்குநர்‌, முனைவர்‌. பி.பொ.முருகன்‌ புதிய தொழில்‌ நுட்பங்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதில்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையத்தின்‌ முக்கியத்துவத்தையும்‌ மற்றும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையத்தில்‌ விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌ பயிற்சிகள்‌ குறித்து எடுத்துரைத்தார்‌.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ.கீதாலட்சுமி‌, தனது தலைமையுரையில்‌ விவசாயத்தில்‌ வானிலையின்‌ முக்கியத்துவத்தையும்‌, வானிலை முன்னறிவிப்பை கடைபிடித்து பயிர்களை உற்பத்தி செய்வதைப்‌ பற்றியும்‌, வானிலை முன்னறிவிப்பைப் பயன்படுத்தி அதிகலாபம்‌ பெறுவதைப்‌ பற்றியும்‌ எடுத்துரைத்து விவசாயிகளுடன்‌ கலந்துரையாடினர்‌.

முனைவர்‌.இரா.ஜெகதாம்பாள்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌, வேளாண்‌மை அறிவியல் நிலையம்‌, சந்தியூர்‌ இந்த தேசிய அளவிலான இரண்டு நாள்‌ இணையவழி கருத்தரங்கில்‌ வேளாண்மை அறிவியல்‌ நிலையத்தில்‌ பணியாற்றும்‌ முனைவர்‌.சி.பிரதிபா & செ.பிரபாகரன்‌ மற்றும்‌ அனைவரும்‌ சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி கூறினார்‌. மேலும்‌ இக்கருத்தரங்கில்‌ கலந்து கொண்ட பல்வேறு விவசாயிகள்‌, மாணவர்கள்‌, இளைஞர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்களுக்கும்‌ நன்றி கூறினார்‌. இக்கருத்தரங்கில்‌ 200க்கும்‌ மேற்பட்டோர்‌ கலந்து கொண்டு பயன்‌ பெற்றார்கள்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...