கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி வரும் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: இது குறித்து செய்தி குறிப்பில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 16.08.2022, 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை,முதுகலை முடித்த மாணவர்கள்‌, (M.Sc./ M.Tech) பட்டப்படிப்பு சான்றிதழ்‌ (degree Certificate) மூலமாகவும்‌, தற்பொழுது இறுதியாண்டு பயிலும்‌ மாணவர்கள்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ (அ) கல்லூரி முதல்வர்களிடம்‌ பெற்ற படிப்பு முடிவுற்ற சானறிதழ்‌ (Course Completion Certificate) விண்ணப்பிக்கலாம்‌. எனினும்‌ பட்டப்படிப்பு சானறிதழைச்‌ சமர்பித்த பின்னர் மாணவர்‌ சேர்க்கை உறுதி செய்யப்படும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

முனைவர்‌.அ. லக்ஷ்மணன்‌,

முதனமையர். முதுகலை மற்றும்‌ தலைவர்‌ முதுகலை மாணவர்‌ சேர்க்கை

முதுநிலைபட்ட மேற்படிப்பு பயிலகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641003.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9489056710 லும்,

மின்னஞ்சல்‌ [email protected] முலமும் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...