கோவை பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி..!

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.



என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹர சுதன் விழாவிற்கு தலைமையேற்று நடத்தினார். விழாவின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, கலந்து கொண்டு பேசுகையில், "வாழ்க்கையில் நன்றியுணர்வே நம்மை உயர்த்தும் பண்பு, வெற்றி என்பது தனிமனிதனையும் தேசத்தையும் சேர்ந்தே உயர்த்த வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார்.



மாணவர்கள் நமது பொது அறிவைக்கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்து கல்வியிலும் நல்லொழுக்க பழக்கங்களில் மனதை செலுத்தினால் வாழ்க்கையில் என்றும் வெற்றியே என்றார்.

மேலும் காலம் தவறாமல் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை வளமான வாழ்க்கைக்கு அடிப்படை' என்று தெரிவித்தார்.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர். இராமசாமி. சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார். மேலும் நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...