தேசிய அளவில் டார்க்கத்தான்-2022 போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

தேசிய அளவில் டெல்லியில் நடைபெற்ற டார்க்கத்தான்-2022 போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்திய அளவில் ஐஐடிகளை பின்னுக்குத் தள்ளி முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.


கோவை: கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு மாணவர்கள் குழுக்கள் இந்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நடத்திய டார்க்கத்தான் 2022 என்ற தேசிய அளவிலான கணினி நிரல் மற்றும் மென்பொருள் உருவாக்கல் நிகழ்வில் நாட்டிலேயே சிறந்த இரண்டு அணிகளுக்கான விருதுகளை பெற்று முறையே முதல் பரிசையும் இரண்டாம் பரிசினையும் வென்றெடுத்துள்ளனர்.

கடந்த 2022-ஜூலை, 19-ந்தேதி அன்று, புது தில்லியில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி சுற்றில் பங்கு பெற்ற டெல்லி ஐஐடி, கோவா ஐஐடி, கான்பூர் ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி போன்ற தலைசிறந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களோடு போட்டியிட்டு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசுகளை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் இரண்டு மாணவர்கள் அணியினர் வென்றெடுத்துள்ளனர்.

இந்த வெற்றி இக்கல்லூரியின் மாணவர்களின் கணினி நிரல் எழுதும் நுட்பமும், மென்பொருள் எழுதும் திறனும், கருத்துருக்களை உருவாக்கும் திறனும் நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இக்கல்லூரியின் தரத்தின் வெற்றி மகுடத்தில் மேலும் ஓர் வைரக்கல்லாய் விளங்குகிறது.



இந்த நிகழ்வில் இறுதி ஆண்டு கணினி மற்றும் பொறியியல் மாணவர் டி. குமரகுரு, மூன்றாம் ஆண்டு முதுநிலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர் டி. ஜி. புவனேசும் ஆகியோர் டார்க் இணையத்தில் ‘போதை பொருள் கடத்தல் முயற்சிகளை கண்டுபிடித்து தடுத்தல்’ என்ற கருத்துருவினை உருவாக்கி முதல் இடத்தை பிடித்து ரூபாய் இரண்டரை லட்சம் ரொக்க பரிசினை வென்றனர்.



தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர் அரவிந்த ஹரிஹரன், தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர் ஆர்.கெளதம், இயந்திரவியல் துறை மாணவர் எஸ். குமரன் ஆகிய மாணவர்களை கொண்ட கல்லூரியின் இரண்டாம் மாணவர் குழுவினர் ‘டார்க் இணையத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வலை பின்னலை அடையாளம் காணுதல்’ என்ற தலைப்பிலான கருத்துரு இரண்டாம் பரிசாக ரூ.2 லட்சத்தினை வென்றனர்.



இந்த இரண்டு வெற்றி குழுக்களையும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் ஏ. பிரியா,. தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ஜி.பிரியதர்ஷினி ஆகியோர் வழிநடத்தினர்.

இந்த டார்க்கத்தான் 2022 மென்பொருள் உருவாக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த கருத்துருக்களை உருவாக்கி, கணினி நிரல் எழுதி மென்பொருள்களை உருவாக்கி, ஐஐடி மாணவர்களையும் தாண்டி முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய பேராசிரியைககளையும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலுருமாகிய எஸ். மலர்விழி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே. ஆதித்யா, தலைமை செயல் அலுவலர் பேராசிரியர் முனைவர் கே. சுந்தரராமன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே . ஜேனட் ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.

மேலும் ஐஐடிகளை பின்னுக்கு தள்ளி அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை இக்கல்லூரி மாணவர்கள் வென்றிருப்பது ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சிறந்த பொறியியல் மாணவர்களை உருவாக்கி தன் பங்களிப்பாக நாட்டுக்கு அளித்து கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் வெற்றி சான்றாக இது விளங்குகிறது என கல்வியாளர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...