தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு குறித்த இரண்டு நாள் பணிமனை துவக்கம்

கோவையில் நடைபெற்ற வேளாண் விரிவாக்க ஆராய்ச்சி தரவு பகுப்பாய்வு குறித்த இரண்டு நாள் பணிமனையை துவக்கி வைத்த துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி மாணவர்கள் புது மென்பொருட்கள் (Software) பயன்படுத்தி தங்கள் ஆராய்ச்சியில் புதுமையான தரவு பகுப்பாய்வு (Data Analysis) முறைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.


வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு (Data Analysis) குறித்த இரண்டு நாள் பணிமனையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமி இன்று ஜூலை.29-ந்தேதி தொடங்கி வைத்தார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வேளாண்மை விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறையில், வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு (Data Analysis) பற்றிய இரண்டு நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது.



இப்பயிற்சியினை பல்கலைக்கழக துணைவேந்தர், முனைவர். வெ. கீதாலட்சுமி, துவக்கிவைத்து, துவக்கவுரை ஆற்றுகையில் மாணவர்கள் புது மென்பொருட்கள் (Software) பயன்படுத்தி தங்கள் ஆராய்ச்சியில் புதுமையான தரவு பகுப்பாய்வு (Data Analysis) முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சி தரம் உயர்வதோடு, சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை அதிகமான தர மதிப்புள்ள ஆராய்ச்சி புத்தகங்களில் வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மற்ற நாடுகளில் மாணவர்கள் ஆராய்ச்சியில் அதிகமான முக்கியத்துவம் தரவு பகுப்பாய்விற்கு கொடுக்கப்பட்டு, சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகின்றனர். எனவே மாணவர்கள் தாங்கள் இப்பயிற்சியில் கற்றுக் கொண்டதோடு மட்டுமல்ல' புதுப்புது வழி முறைகளை தாங்களே கற்றுக் கொண்டு தங்களது ஆராய்ச்சிகளை மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்து வெற்றி காண செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

முன்னதாக வேளானர்மை விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறையின் தலைவர் முனைவர் சி. கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தி இப்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

வேளாண்மை மற்றும் ஊரசு மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர்முனைவர். டி. சுரேஷ் குமார் வாழ்த்துரையில் வேளாண் பல்கலைக்கழகத்தின் தர வரிசையில் அதிகமான தர மதிப்புள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும், அதில் புதிய மென்பொருள் உபயோகம் மற்றும் தரவு பகுப்பாய்வு முன்னிலை வகிக்கின்றது என்று எடுத்துரைத்தார்.

முதல்வர், முனைவர் ஏ. லட்சுமணன்,முதுகலை படிப்பு தனது பாராட்டுரையில் அதிகமான தரவு பகுப்பாய்வு மதிப்புள்ள ஆராய்ச்சி கட்டுரைகளை மாணவர்கள் வெளியிட வேண்டுமென்றும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு மதிப்பு கூட்டப்படும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் இந்த பணிமனை மூலம் மாணவர்கள் முதன்மை அனுபவம் பெறுவதோடு, பயிற்சியின் அனுபவங்களை, பயிற்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இப்பணிமனையின் ஒரு பகுதியாக ஒரு தரவு பகுப்பாய்வு நூல் வெளியிடப்பட்டது. அதன் பின் படிவமும் குறுந்தகடும் வெளியிடப்ட்டது.

இப்பணிமனையில் கிட்டத்தட்ட 70 முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளில் இருந்தும் கலந்து கொண்டனர், மேலும் இதில் ஆசிரியர்களும் பங்கு வகுத்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...