தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 8-ம் தேதி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என கோவை அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 163-அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1-லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. நடப்பாண்டில், கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.

இதனையடுத்து, பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த 8-ம் தேதி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வு முடிவுகள் வராததால், கால அவகாசம் நீடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26-பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,466- இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு தற்போது வரை சுமார் 25-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் இருப்பதால், இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லூரியில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்காக இலவச விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...