இன்ஜினியரிங்‌ ஆன்லைன்‌ கவுன்சலிங்கில்‌ சேரவுள்ள மாணவ- மாணவியர்களுக்கு கோவையில் இலவச வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி..!

தமிழக அரசால்‌ நடத்தப்படும்‌ இன்ஜினியரிங்‌ ஆன்லைன்‌ கவுன்சலிங்கில்‌ சேரவுள்ள மாணவ-மாணவியர்களுக்கு இந்த ஆண்டிற்க்கான இலவச வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி 24.07.2022 (ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல்‌ 12.00 மணி வரை ) கோவை பி.எஸ்‌.ஜி தொழில்நுட்பக்‌ கல்லூரி, அசெம்பிளி ஹாலில்‌ நடைபெற உள்ளது.


கோவை: கோவையில் இன்ஜினியரிங்‌ ஆன்லைன்‌ கவுன்சலிங்கில்‌ சேரவுள்ள மாணவ- மாணவியர்களுக்கு இந்த ஆண்டிற்கான இலவச வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

சி.எஸ்‌.ஐ என்ற இந்தியக்‌ கணினி சங்கம்‌, கோயமுத்தூர்‌ சேப்டர்‌, தமிழக அரசால்‌ நடத்தப்படும்‌ இன்ஜினியரிங்‌ ஆன்லைன்‌ கவுன்சலிங்கில்‌ சேரவுள்ள மாணவ-மாணவியர்களுக்கு இந்த ஆண்டிற்க்கான இலவச வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி 24.07.2022 (ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல்‌ 12.00 மணி வரை கோவை பி.எஸ்‌.ஜி தொழில்நுட்பக்‌ கல்லூரி, அசெம்பிளி ஹாலில்‌ நடைபெற உள்ளது. இதில்‌ தமிழக மாணவ, மாணவியர்கள்‌ அவர்களின்‌ பெற்றோர்களுடன்‌ கலந்துகொண்டு பயன்‌ பெறலாம்‌.

தொடர்ந்து 18வது ஆண்டாக இந்த வழிகாட்டுதல்‌ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும்‌ வழிகாட்டுதல்‌ நிகழ்வில்‌ முனைவர்‌ புருஷோத்தமன்‌ (செயலர்‌, பொறியியல்‌ கலந்தாய்வு 2022) இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு பேச இருக்கிறார்‌, மேலும்‌ டாக்டர்‌ நாராயணசாமி (டீன்‌, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி; முன்னாள்‌ செயலாளர்‌-தமிழ்நாடு பொறியியல்‌ கலந்தாய்வு) கலந்து கொண்டு தமிழக அரசு நடத்தி வரும்‌ ஆன்லைன்‌ கலந்தாய்வு பற்றி விளக்கம்‌ அளிக்க உள்ளார்கள்‌. மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கல்வியாளர்களும்‌, பேராசிரியர்களும்‌ கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கும்‌, பெற்றோர்களுக்கும்‌ இந்த தொழில்நுட்பத்‌துறையின்‌ வளர்ச்சிப்‌ போக்குகள்‌ மற்றும்‌ வேலை வாய்புகள்‌ எவ்வாறு உள்ளன என்பதைச்‌ சுட்டிக்காட்டி விளக்கமளிப்பதுடன்‌ உரிய வழிகாட்டுதல்களையும்‌ வழங்க உள்ளார்கள்‌. இந்த சேர்க்கைத்‌ தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும்‌ உரிய பதில்களைத்‌ தெளிவாக தர உள்ளார்கள்‌.

இந்த நிகழ்ச்சியில்‌ கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள்‌ https://bit.ly/CSICBE லிங்கின்‌ மூலம்‌ முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.

கடந்த ஆண்டுகளில்‌ நடந்து முடிந்துள்ள இந்நிகழ்ச்சியானது, மாணவ, மாணவியர்களுக்கு மகத்தான வெற்றியை தந்து மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது. இதன்‌ காரணமாக கடந்த ஆண்டுகளில்‌ 16,000க்கும்‌ மேற்பட்டோர்‌ பயன்‌ பெற்று இருக்கிறார்கள்‌.

சி.எஸ்‌.ஐ எனப்படும்‌ இந்திய கணினிக்‌ சங்கம்‌ 1965-ல்‌ உருவாக்கப்பட்டது. அன்று முதல்‌ கணினித்‌ தொழில்‌ துறை வளர்ச்சி மற்றும்‌ முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும்‌ லாப நோக்கம்‌ இல்லாமல்‌ சிறப்பாக வழங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்‌ சுமார்‌ 1 இலட்சம்‌ உறுப்பினர்கள்‌ சேர்ந்துள்ளார்கள்‌ என்பதே இதன்‌ வெற்றியாகும்‌.

இச்சங்கத்தின்‌ கோயமுத்தூர்‌ பிரிவு கடந்த 38 ஆண்டுகளாக மிகத்‌ துடிப்புடன்‌ சிறப்பாக பணியாற்றி வருகிறது.

இந்த கலந்தாய்வு விளக்க நிகழ்ச்சி பற்றிய மேலும்‌ விபரங்களுக்கு 94898-31307 என்ற தொலைபேசியிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்‌.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...