இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ (ICAR) சர்தார்‌ படேல்‌ சிறந்த பல்கலைக்கழக விருதை கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் வென்றது..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்க நடவடிக்கைகளில்‌ சிறப்பாகச்‌ செயல்பட்டதன்‌ அடிப்படையில்‌ 2021 ஆம்‌ ஆண்டிற்கான, சர்தார்‌ படேல்‌ சிறந்த ஐசிஏஆர்‌ நிறுவன விருதை, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமம்‌ வழங்கி கௌரவித்துள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ (ICAR) சர்தார்‌ படேல்‌ சிறந்த பல்கலைக்கழக விருதை வென்றது.

கோயம்புத்தூரில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்க நடவடிக்கைகளில்‌ சிறப்பாகச்‌ செயல்பட்டதன்‌ அடிப்படையில்‌ 2021 ஆம்‌ ஆண்டிற்கான, சர்தார்‌ படேல்‌ சிறந்த ஐசிஏஆர்‌ நிறுவன விருதை, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமம்‌ வழங்கி கௌரவித்துள்ளது.

இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமம்‌ (ICAR), புது தில்லி, இந்தியாவில்‌ விவசாயம்‌, தோட்டக்கலை, மீன்வளம்‌ மற்றும்‌ விலங்கு அறிவியல்‌ ஆகியவற்றில்‌ ஆராய்ச்சி மற்றும்‌ கல்வியை ஒருங்கிணைத்து, வழிகாட்டி மற்றும்‌ நிர்வகிப்பதற்கான உச்ச அமைப்பாகும்‌.

இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ கீழ்‌ 111 நிறுவனங்கள்‌ மற்றும்‌ 71 மத்திய/மாநில வேளாண்‌ பல்கலைக்கழகங்கள்‌ (CAU/SAU) நாடு முழுவதும்‌ இயங்குகின்றன.

இது உலகின்‌ மிகப்பெரிய தேசிய விவசாய அமைப்புகளில்‌ ஒன்றாகும்‌. மத்திய/மாநில, ICAR நிறுவனங்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ ஆகியோரின்‌ சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும்‌ வகையில்‌, ஐசிஏஆர்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ ஜீலை 16 அன்று, அதன்‌ நிறுவன தினத்தை நினைவுகூரும்‌ வண்ணம்‌ 15 தேசிய விருதுகளை வழங்குகிறது. குறிப்பாக, சர்தார்‌ படேல்‌ சிறந்த ICAR நிறுவன விருது, சிறந்த பல்கலைக்கழக செயல்திறனுக்கான ஊக்கத்தை வழங்குவதற்கும்‌ நிறுவனப்‌ பெருமையை மேம்படுத்துவதற்கும்‌ சிறந்த முறையில்‌ செயல்படும்‌ பல்கலைக்கழகம்‌/நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது வளங்களின்‌ ஒதுக்கீடு, முதன்மை வெளியீடுகள்‌, அறிவியல், தொழில்நுட்பம்‌, சமூக-பொருளாதார திறன்‌ மற்றும்‌ வெளியீடுகளின்‌ தாக்கங்கள்‌, தேசிய தேர்வுகளில்‌ மாணவர்களின்‌ செயல்திறன்‌, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும்‌, தேசிய அளவில்‌ மாணவர்‌ விருதுகள்‌/அங்கீகாரம்‌ வளங்களைத்‌ திரட்டுதல்‌ மற்றும்‌ பயன்படுத்துதல்‌ திறன்‌, பணியாளர்களின்‌ நிலை, மற்ற நிறுவனங்களுடனான செயல்பாட்டுத்‌ தொடர்புகளின்‌ அளவு மற்றும்‌ தரம்‌, தேசிய மற்றும்‌ சர்வதேச அளவில்‌ ஆசிரியர்‌ விருதுகள்‌ மற்றும்‌ அங்கீகாரங்கள்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

மதிப்பீட்டுக் காலத்தில்‌ 374 தேசிய அளவிலான நிதியுதவிகளைப்‌ பெற்றதன்‌ மூலம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ மற்ற மாநில வேளாண்‌ பல்கலைக்கழக மாணவர்களை விஞ்சியுள்ளனர்‌. உயர்கல்விக்கான மாணவர்களை ஈர்ப்பதில்‌ 71 மத்திய/மாநில வேளாண்‌ பல்கலைக்கழகங்களில்‌ (CAU/SAU) தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ முதலிடத்தில்‌ உள்ளது. மேலும்‌, ஆராய்ச்சியில்‌ 74 மேம்படுத்தப்பட்ட பயிர்‌ வகைகளையும்‌, 2000 ஸ்கோபஸ்‌ குறியீட்டு அறிவியல்‌ கட்டுரைகளையும்‌ வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்‌ காலத்திலும்‌ சுமார்‌ 6 லட்சம்‌ விவசாயிகளுக்குத் தொழில்நுட்பங்களை வழங்குவதன்‌ மூலம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சிறந்து விளங்கியது. இம்முயற்சிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தை ஐசிஏஆர்‌ தரவரிசையில்‌ முன்னிலைப்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...