கோவை சங்கர்‌ IAS-அகாடமி மாணவர்கள்‌ குரூப்‌-1 தேர்வில்‌ மாநில அளவில்‌ சாதனை..!

குரூப்‌-1 தேர்வில் கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌.அகாடமியை சேர்ந்த மாணவி சத்யானந்தி மாநில அளவில்‌ 2-வது இடம்‌ பிடித்து சாதனை படைத்திருக்கிறார்‌. மாணவி ஜெய்ஸ்ரீ 17-வது இடத்தையும்‌, மாணவி காளீஸ்வரி 57-வது இடத்தையும்‌ பிடித்துள்ளனர்‌.


கோவை: கோவை சங்கர்‌ IAS-அகாடமி மாணவர்கள்‌ குரூப்‌-1 தேர்வில்‌ மாநில அளவில்‌ சாதனை படைத்துள்ளனர்‌.

குரூப்‌-1 தேர்வு முடிவுகள்‌ (15.7.2022) அன்று வெளியிடப்பட்டது. இதில்‌ கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமியில்‌ படித்த மாணவர்கள்‌ சாதனை படைத்துள்ளனர்‌.



அதேவேளையில்‌ புதிய வகுப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கையும்‌ தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமி இயக்குனர்‌ அருண்‌ கூறியதாவது:-

குரூப்‌-1 தேர்வில்‌ சப்‌-கலெக்டர்‌, டி.எஸ்‌.பி, வணிகவரி உதவி கமிஷனர்‌ உள்பட பல்வேறு துறைகளில்‌ காலியாக இருக்கும்‌ 69 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்‌-1 தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ (டி.என்‌.பி.எஸ்‌.சி.) 3 கட்டங்களாக நடத்தியது. அந்த தேர்வின்‌ இறுதி முடவுகள்‌ தற்போது வெளியாகி இருக்கறது.

இதில்‌ கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌.அகாடமி மாணவர்கள்‌ பலர்‌ சாதனை படைத்துள்ளனர்‌.



மாணவி சத்யானந்தி மாநில அளவில்‌ 2-வது இடம்‌ பிடித்து சாதனை படைத்திருக்கிறார்‌.



மாணவி ஜெய்ஸ்ரீ 17-வது இடத்தையும்‌, மாணவி காளீஸ்வரி 57-வது இடத்தையும்‌ பிடித்துள்ளனர்‌. மேலும்,‌ மாநில அளவில்‌ பல மாணவ-மாணவிகள்‌ சிறந்த நிலைகளை எட்டு சாதனை படைத்திருக்கிறார்கள்‌. குரூப்‌-1 தேர்வில்‌ வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை, அகாடமி நிர்வாக அதிகாரிகள்‌ பாராட்டினார்கள்‌.

கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமி கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட அரசு பணியாளர்களை கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமி உருவாக்கி இருக்கிறது என்பதை பெருமையுடன்‌ குறிப்பிடுகிறோம்‌.

குரூப்‌-1 தேர்வில்‌ 100-க்கும்‌ மேற்பட்ட மாணவர்களையும்‌, குரூப்‌-2 தேர்வில்‌ 3 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட மாணவர்களையும்‌, குரூப்‌-4 தேர்வில்‌ 5 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட மாணவர்களையும்‌ எங்கள்‌ நிறுவனம்‌ வெற்றி பெற வைத்து அரசு அதிகாரிகளாக அரியணை ஏற்றியிருக்கிறது.

இன்னும்‌ ஏராளமான அரசு அதிகாரிகளை உருவாக்கவும்‌ சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்‌. தரமான வல்லுனர்‌ குழு, சிறந்த பாட தொகுப்பு, உரிய தேர்வுகள்‌ என மாணவர்கள்‌ வெற்றிபெற சரியான பாதையை வகுத்து தருகிறோம்‌.

மாணவர்களின்‌ தன்னம்பிக்கையும்‌, விடாமுயற்சியும்‌ இருந்தால்‌ போட்டித்தேர்வில்‌ சாதிக்கலாம்‌. மாணவர்களின்‌ முயற்சிகளை சாதனையாக மாற்ற கலங்கரை விளக்கமாக கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமி விளங்கி வருகிறது.



இந்நிலையில்‌ வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.



அதில்‌ மாணவிகள்‌ தங்களது பெற்றோருடன்‌ கலந்து கொண்டு தேர்வில்‌ வெற்றி பெற்ற அனுபவத்தையும்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு தேர்வில்‌ வெற்றி பெற தேவையான குறிப்புகளையும்‌ வழங்கினர்‌.



கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌ அகாடமி சார்பாக நினைவு பரிசு வழங்கி அகாடமியின்‌ இயக்குனர்‌ அருண்‌ கெளரவித்தார்‌.

இச்சாதனை பயணத்தின்‌ தொடர்ச்சியாக கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமியில்‌ புதிய பயிற்சி வகுப்புகள்‌ தொடங்க இருக்கின்றன. இதற்கான மாணவர்‌ சேர்க்கையும்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான மேலும்‌ விவரங்களுக்கு 98407-02761, 94892-22761 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என கோவை சங்கர்‌ ஐ.ஏ.எஸ்‌. அகாடமி இயக்குனர்‌ அருண்‌ தெரிவித்தார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...