கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ 'தோட்டக்கலை உற்சவம்‌ 2022'..!

கோவை TNAU-வில்‌ தோட்டக்கலை‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ சார்பாக கோலாகலமாக நடைபெற உள்ள “ஹார்ட்டி உட்சவ்‌ 2022” நிகழ்ச்சியில்‌ பங்குபெற தமிழகத்தில்‌ உள்ள அனைத்து தோட்டக்கலைக்‌ கல்லூரிகளைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கும்‌ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில்‌ உள்ள அனைத்து தோட்டக்கலைக்‌ கல்லூரிகளைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கும்‌ “ஹார்ட்டி உட்சவ்‌ 2022” நிகழ்ச்சியில்‌ பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ சார்பாக கோலாகலமாக நடைபெற உள்ள “ஹார்ட்டி உட்சவ்‌ 2022” நிகழ்ச்சியில்‌ பங்குபெறத் தமிழகத்தில்‌ உள்ள அனைத்து தோட்டக்கலைக்‌ கல்லூரிகளைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கும்‌ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலையின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ விழிப்புணர்வை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும்‌ விதமாக ஜீலை 23, 2022 ௮ன்று நடைபெற உள்ள இந்நிகழ்வில்‌ கல்லூரி மாணவர்களின்‌ திறமைகளை வெளிக்கொணரும்‌ நோக்கில்‌ பல்வேறு போட்டிகள்‌ நடத்தப்பட உள்ளன.

இந்நிகழ்வில்‌ மாணவர்களின்‌ நுண்ணறிவு திறனை மேம்படுத்தும்‌ விதமாக வினாடி வினா, வள்ளுவம்‌, பக்கம்மாறி பேசு, பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகளில்‌ சிற்பம்‌ செய்தல்‌, நெருப்பில்லா சமையல்‌ உள்ளிட்ட புதுமையான 21 போட்டிகள்‌ நடத்தப்பட உள்ளன.

பல்கலைக்கழக அண்ணா அரங்கில்‌ நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில்‌ கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக, தோட்டக்கலைக்‌ கல்லூரி முன்னாள்‌ மாணவர்‌ முனைவர்‌. வீ. ஜெ. சந்திரன்‌, ஐ.பி.எஸ்‌, காவல்துறைத் தலைவர்‌, புதுச்சேரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்‌.

இந்நிகழ்வானது பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ. கீதாலட்சுமி மற்றும்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ஜரீன்‌ வேதமோனி ஆகியோரின்‌ வழிகாட்டுதவின்படி நடைபெறவுள்ளது. மேலும்‌, கோவையில்‌ பயிலும்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மாணவர்கள்‌, இத்துறையில்‌ நிகழ்ந்து வரும்‌ வளர்ச்சிகள்‌ மற்றும்‌ புதுமைகள்‌ குறித்த கண்காட்சியும்‌ நடத்த உள்ளனர்‌.

இப்போட்டிகளில்‌ பங்குகொள்ள விரும்பும்‌ அனைத்து தோட்டுக்கலைக்கல்லூரி மாணவர்கள்‌ www.hortiutsav2022.com என்ற இணையதளம்‌ மூலம்‌ முன்பதிவு செய்யலாம்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...