தமிழ் இலக்கியப்படிப்பை அர்த்தமுள்ள படிப்பாக மாற்ற கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் புதிய முயற்சி..!

தமிழ் இலக்கியப்படிப்பை அர்த்தமுள்ள படிப்பாக மாற்றிக் கட்டுரை, கவிதை, கதை, நாடகம், திரைப்படம் எனப் படைப்பாக்கத் துறைகளில் எழுதும் பயிற்சிகளை வழங்கப்போகிறது. அதனை வகுப்பறை கல்வியாக மட்டும் கற்பிக்காமல் செய்முறை கல்வியாக கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



கோவை: தமிழ் இலக்கியப்படிப்பை அர்த்தமுள்ள படிப்பாக மாற்ற கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்). அப்படிப்பு, தமிழ் இலக்கியப்படிப்பை அர்த்தமுள்ள படிப்பாக மாற்றிக் கட்டுரை, கவிதை, கதை, நாடகம், திரைப்படம் எனப் படைப்பாக்கத் துறைகளில் எழுதும் பயிற்சிகளை வழங்கப்போகிறது. அதனை வகுப்பறைக் கல்வியாக மட்டும் கற்பிக்காமல் செய்முறைக் கல்வியாகக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாகத் தமிழ்ப் பட்டப்படிப்பு மாற்றமில்லாமல் கற்பிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பை முடித்தவர்களுக்கு இருக்கும் முதன்மையான வேலை வாய்ப்பு தமிழாசிரியர்களாக ஆவது. இரண்டாவது அனைத்துப் பட்டதாரிகளையும் போல அரசுத் துறைகளுக்கு நடக்கும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராவது.

இதிலிருந்து ஒரு மாற்றத்தை முன்வைக்கிறது கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் இளங்கலைத் தமிழ் (படைப்பாக்கம்). அப்படிப்பு, தமிழ் இலக்கியப்படிப்பை அர்த்தமுள்ள படிப்பாக மாற்றிக் கட்டுரை, கவிதை, கதை, நாடகம், திரைப்படம் எனப் படைப்பாக்கத் துறைகளில் எழுதும் பயிற்சிகளை வழங்கப்போகிறது. அதனை வகுப்பறைக் கல்வியாக மட்டும் கற்பிக்காமல் செய்முறைக் கல்வியாகக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவரின் தனித்திறனையும் கண்டறிந்து, பிறரோடு இணைந்து குழுவாகச் செயல்படும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவுள்ளது. அதற்காகத் திரைப்படம், பத்திரிகை, ஊடகங்கள், நடிப்பு, ஓவியம், மொழிபெயர்ப்பு, ஆளுமைப்பண்புருவாக்கம் போன்ற துறைகளின் வல்லுநர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

வல்லுநர்களை வளாகத்திற்கு அழைத்தும், தொழிலகங்களுக்கு மாணவர்களை அனுப்பியும் தொழிற்துறைப் படிப்பின் முறைகளைத் தமிழ் மாணவர்களுக்கு வழங்கிடவும் திட்டமிட்டுள்ளது.

தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கத்தில் தொழிலகப் பயிற்சிகளையும் தொழில்துறை திறப்புகளையும் இலக்கியப் படிப்பில் உருவாக்கி வேலை வாய்ப்புக்கான வழிகளைக் காட்டப்போகும் படிப்பாக மாற்றம் செய்துள்ளது குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி.

விண்ணப்பிக்க தகுதிகள்:-

அங்கீகரிக்கப்பட்ட கல்வி முறையில் 10, +2 வகுப்பில், தமிழ் மொழிப் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

இதற்கிணையான கல்வி வாரியத்தில் தமிழை மொழிப்பாடமாக கற்ற அயல்நாட்டு கல்வி.

தொடர்புகொள்ளுங்கள்:-

குமரகுரு கல்வி வளாகம், சின்னவேடம்பட்டி அஞ்சல், கோயம்புத்தூர் 641 049.

admissions.kclas.ac.in /0422-266-1555/ +9194894-57396

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...