கோவை இ.எஸ்.ஐ யில் பட்டமளிப்பு விழா: பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்க வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி என மொத்தம் 70 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.



கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதலாம் ஆண்டு பட்டமளிப்பு இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி அரங்கில் நடைபெற்றது.



இந்த பட்டமளிப்பு விழாவில், மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.



அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் தான் 36 அரசு மருத்துவ கல்லூரி, 34 தனியார் என மொத்தம் 70 மருத்துவ கல்லூரிகள் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து 10,425 மாணவர்கள் மருத்துவர்களாக வெளியே செல்கிறார்கள். அதில், அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து 5,550 மாணவர்கள் மருத்துவர்கள் ஆகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் 2011 யில் கலைஞர் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது தான்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்கள் உள்ளது. அந்ந மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் கோரி வருகிறார். அவை நிறைவேற்றப்பட்டால் ம் அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி உள்ள மாநிலமாக தமிழகம் திகழும், என தெரிவித்தார்.

கோவையில் நடந்த செம்மொழி மாநாடு கலைஞருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்து. அதே போல, தற்போதைய முதல்வர் கோவை மாவட்டத்தில் கொரோனா வார்டில் நேரில் ஆய்வு மேற்கொண்டது இந்தியா அளவில் புகழ் பெற்று கொடுத்தது.

மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ படிப்பை படித்த இந்த மாணவர்கள் 3 கொரோனா அலைகளிலும் பணியாற்றி உள்ளனர். இதே போல், எதிர்காலத்தில் பேரிடரில் எளிதாக எதிர்கொள்ள முடியும், எதிர்காலத்தில் மருத்துவ பணி ஒரு சவாலான பணியாக இருக்கும். அதை இந்த மருத்துவர்கள் எளிதாக கையாள்வார்கள் என தெரிவித்தார்.

மேலும் நானும் தந்தையாக இருந்து மகன் மருத்துவர் பட்டம் வாங்குவதை பார்க்க வேண்டும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மாஸ்கோ சென்றேன், அப்போது மகன் பட்டம் பெற்ற போது இருந்த மிகப் பெரிய மகிழச்சி இந்த அரங்கில் உள்ள பெற்றோருக்கும் இருக்கும் என கூறிய அவர், 2017 க்கு பின் நீட் எழுதி வந்தவர்கள், எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வந்தவர்கள் என பெற்றோருக்கு தான் தெரியும். ஆனால், 2016 ல் மாநில பாட திட்டத்தில் வந்த நீங்கள் திறமையானவர்கள் என தெரிவித்தார்.

மேலும், மாநில பட திட்டத்தில் படித்து பட்டம் பதக்கம் பெற்ற மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டினார். நீட் எழுதாமல் வந்த மாணவர்கள் திறமையாளர்கள் என்பதை காட்டவே இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை ஆட்சியரே மருத்துவராக இருப்பதால், மருத்துவ கட்டமைப்பு கோவையில் சிறப்பாக உள்ளது.

இன்றைய பட்டமளிப்பு விழாவில் 104 பேருக்கும் பட்டத்தை வழங்கிய பின் தான் செல்வேன் என தெரிவித்த அமைச்சர், பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கையை வைத்தார்.



இதையடுத்து, அனைத்து மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பட்டத்தை பெற்றுச் சென்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...