கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தமிழக அரசின்‌ சிறந்த அறிவியல்‌ ஆராய்ச்சியாளர்‌ விருது..!

தமிழக அரசின்‌ சிறந்த அறிவியலாளர்‌ விருது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்நோயியல்‌ துறை பேராசிரியர் மற்றும்‌ தலைவா்‌ முனைவா்‌ கா.கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தமிழக அரசின்‌ சிறந்த அறிவியல்‌ ஆராய்ச்சியாளர்‌ விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின்‌ சிறந்த அறிவியலாளர்‌ விருது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்நோயியல்‌ துறை பேராசிரியர் மற்றும்‌ தலைவா்‌ முனைவா்‌ கா.கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ பயிரைத்தாக்கும்‌ நோய்களில்‌ பயிர்‌ நச்சுயிரியல்‌, உயிரியல்‌ மேலாண்மை மற்றும்‌ பயிர்‌ நோய்‌ காரணிகளின்‌ இடைத்தொடர்புகளில்‌ தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து அதன்‌ ஆய்வக படைப்புகளையும்‌ வெளியிட்டுள்ளார்.

முனைவர்‌ கார்த்திகேயன்‌ தேசிய மற்றும்‌ பன்னாட்டு அறிவியல்‌ நிதி நிறுவனங்களிலிருந்து இருபத்து ஐந்து திட்டங்கள்‌ மூலம்‌ சுமார்‌ 11 கோடி நிதி பெற்று ஆராய்ச்சிகள்‌ செய்துள்ளார்‌. 200க்கும்‌ மேற்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி வெளியீடுகளை பன்னாட்டு இதழ்களான சைன்ட்டிபிக்‌ ரிப்போர்ட்ஸ்‌, மைக்ரோபயலாஜிக்கல்‌ ரிசர்ச்‌, வோல்ட்‌ ஜர்னல்‌ ஆஃப் மைக்கோபயலாஜி அன்ட்‌ பயோடெக்னாலஜி, பைட்டோபேத்தாலஜி போன்றவற்றில்‌ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில்‌ புதியதாக பயிர்களைத்தாக்கும்‌ நச்சுயிரிகளான பாகற்காயில்‌ வேர்க்கடலை மொட்டுக்கருகல்‌ நச்சுயிரி (GBNV), மணத்தக்காளியில்‌ புகையிலை வெளுத்தல்‌ நச்சுயிரி (TMV), வேர்க்கடலையில்‌ குடைமிளகாய்‌ பழுத்தல்‌ நச்சுயிரி (CCV), பூசணியில்‌ ஜீசூனி மஞ்சள்‌ வெளுத்தல்‌ நச்சுயிரி, புடலையில்‌ வெள்ளரி பச்சை வெளுத்தல்‌ நச்சுயிரி, செவ்வந்தியில்‌ தக்காளிப்புள்ளி வாடல்‌ நோய்‌, பாகலில்‌ ஜீகுனி மஞ்சள்‌ வெளுத்தல்‌ நோய்‌ மற்றும்‌ அழகு தாவர ஜீனியா-வில்‌ வெண்ணிலா திரித்தல்‌ வெளுப்பு நச்சுயிரிகளை கண்டுபிடித்து அதன்‌ படைப்புகளை தலைசிறந்த இதழ்களில்‌ வெளியிட்டுள்ளார்‌.

பூசணி கொடிவகை பயிர்கள்‌, கத்தரி, தக்காளி, மிளகாய்‌, உளுந்து ஆகிய பயிர்களைத்‌ தாக்கும்‌ நச்சுயிரியை துல்லியமாக கண்டறியும்‌ முறைகளை உருவாக்கியுள்ளார்‌. சுமார் ஐநூறுக்கும்‌ மேற்பட்ட நச்சுயிரி, பாக்டீரியா, பூஞ்சாணம்‌ மற்றும்‌ பைட்டோபிளாஸ்மா மரபணு மூலக்கூறுகளை கண்டறிந்து அதனை வெளியிட்டு உள்ளார்.

கம்பு பயிரைத்‌ தாக்கும்‌ பூச்சி மற்றும்‌ நோயை கட்டுப்படுத்த மற்றும்‌ உளுந்து மஞ்சள்‌ தேமல்‌ நோய்க்கு ஒருங்கிணைந்த நோய்‌ மேலாண்மை தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்‌. முக்கிய காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி வகை பயிர்கள்‌ மற்றும்‌ வெங்காயத்தை தாக்கும்‌ நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய்‌ மேலாண்மை முறைகளை உருவாக்கியுள்ளார். பச்சை பயிர்‌ மஞ்சள்‌ தேமல்‌ நோயின்‌ கோட்‌ புரோட்டின்‌ மற்றும்‌ ரெப்ளிகேட்டா புரோட்டினை தடுக்கும்‌ டபுள்‌ ஸ்டான்டர்டு ஆர்‌.என்‌.ஏ வை உருவாக்கி மரபணு மாற்றம்‌ அல்லாத முறையில்‌ நச்சுயிரி நோயை மேலாண்மை செய்துள்ளார்‌. நிலக்கடலை மொட்டுக்கருகல்‌ நச்சுயிரி, புகையிலை கீற்று நச்சுயிரி மற்றும்‌ வெள்ளரி வெளுத்தல்‌ நச்சுயிரிகளின்‌ மரபணு மூலக்கூறு பிரிவுகளை (ஹெச்‌.பி.ஆர்.என்‌.ஏ) எதிராக ஆர்.என்‌.ஏ.ஐ. கன்ஸ்டரக்ட்டுகளை தயாரித்து அதன்‌ மூலம்‌ நோய்க்காரணிக்கு எதிர்ப்பு சத்தியை தூண்டி மேலாண்மை செய்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2010 மற்றும்‌ 2018ம்‌ ஆண்டுகளில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சிறந்த ஆராய்ச்சியாளா்‌ விருது வழங்கி கவரப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல்‌ 30 தேசிய மற்றும்‌ பன்னாட்டு விருதுகளை பெற்றுள்ளார்‌. வாஷிங்டன்‌ பல்கலைக்கழகத்தில்‌ முனைவா்‌ பட்டம்‌ பெற்று சிறந்த ஆய்வக முடிவுகளை வெளியிட்டுள்ளார்‌. பயிர்நோயியல்‌ துறையின்‌ ஆராய்ச்சி தொடர்பாக எட்டு வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்‌.

இத்தகு ஈடுஇணையில்லாத அறிவியல்‌ ஆராய்ச்சிக்காக அவரை பெருமைப்படுத்தும்‌ விதமாக தமிழ்நாடு அரசு 2020ம்‌ ஆண்டின்‌ வேளாண்‌ அறிவியல்‌ துறையில்‌ “தமிழ்நாடு சிறந்த அறிவியல்‌ ஆராய்ச்சியாளா விருது” வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...