கோவை TNAU-வில் பொன் விழா நிறுவன நாள்‌ மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி பட்டத்தகுதி பெறும்‌ விழா..!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ சாதனைகளை அங்கீகரிக்கவும்‌, காலம்‌ வயது வரம்பின்றி அறிவியல்‌ சார்ந்த வேளாண்‌ கல்வியை கற்ற வேளாண்‌ ஆர்வலர்களுக்கு பட்டமளிக்கவும்,‌ பொன்விழா நிறுவன நாள்‌ மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி பட்டத்தகுதி பெறும்‌ விழா நடைபெற்றது.



கோவை: கோவை TNAU-வில் பொன் விழா நிறுவன நாள்‌ மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி பட்டத்தகுதி பெறும்‌ விழா நடைபெற்றது.



வேளாண்கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கத்‌ துறையில்‌ பல புரட்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்‌ பாரம்பரியமிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, அதை உருவாக்கிய சிற்பிகளை நினைவு கூறும்‌ வகையிலும், பல்கலைக்கழகத்தின்‌ சாதனைகளை அங்கீகரிக்கவும்‌, காலம்‌ வயது வரம்பின்றி அறிவியல்‌ சார்ந்த வேளாண்‌ கல்வியை கற்ற வேளாண்‌ ஆர்வலர்களுக்கு பட்டமளிக்கவும்,‌ 01.07.2022 அன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில்‌ பொன்விழா நிறுவன நாள்‌ மற்றும்‌ தொலைநிலைக்‌ கல்வி பட்டத்தகுதி பெறும்‌ விழா நடைபெற்றது.



இவ்விழாவினை சிறப்பிக்கும்‌ வகையில்‌, இந்திய வானிலை ஆய்வு மையத்தின்‌ முன்னாள்‌ பொது இயக்குநர்‌ மற்றும்‌ உலக வங்கி மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ வளர்ச்சி திட்டத்தில்‌ ஆலோசகராக பணியாற்றும்‌ முனைவர்‌. இலஷ்மண்‌ சிங் ரத்தோர்‌ நிறுவன நாள்‌ உரையாற்றி, சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும்‌ விருதுகளை வழங்கினார்‌.



நூற்றி பதினாறு ஆண்டுகால பாரம்பரியமிக்க நிறுவனத்தின்‌ குறிப்பிடத்தக்க சாதனைகளை பல்கலைக்கழத்தின்‌ முன்னாள்‌ துணைவேந்தர்களும்‌, மூத்த அறிஞர்களும்‌ எடுத்துரைத்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகரத்தின்‌ காவல்‌ ஆணையாளர்‌ வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப வாழ்த்துரை வழங்கினார்‌.



வேளாண்‌ கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ விரிவாக்கத்தில்‌ பல வியத்தகு சாதனைகளை புரிந்த வேளாண்‌ அறிஞர்களுக்கு விருதுகளும்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக தொலைநிலைக்‌ கல்வியில்‌ பயின்ற பட்டதாரிகளுக்கு பட்டச்சானறிதழ்களும்‌ வழங்கப்பட்டன.



மேலும்‌, இப்பல்கலைக்கழத்திற்காக பல்லாண்டு கால சேவை புரிந்தோருக்கு, வாழ்நாள்‌ சாதனையாளர்‌ விருதுகள்‌ வழங்கப்பட்டன. அதுமற்றுமின்றி இப்பல்கலைக்கழத்தின்‌ மூத்த அறிவுடையோர்களும்‌, பெரியோர்களும்‌ கெளரவிக்கப்பட்டனர்‌.



விழாவின்‌ முதலாவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ.கீதாலட்சுமி இவ்விழாவின்‌ பங்கேற்பாளர்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின்‌ சிறப்பம்சங்கள்‌ பற்றி உரையாற்றினார்‌. விழாவின்‌ இறுதியாக, இப்பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ முனைவர்‌.ஆர்‌.தமிழ்வேந்தன்‌ நன்றியுரை வழங்கினார்‌.



Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...