கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியுடன் ராம்கோ சிமெண்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி அளிக்கும் விதமாக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.



கோவை: மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி அளிக்க கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியுடன் ராம்கோ சிமெண்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி அளிக்கும் விதமாக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை – தொழில்நுட்ப சேவைகள் பிரிவு பொது மேலாளர் அனில்குமார் பிள்ளை மற்றும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் தாமரை ஆகியோர் இடையே கையெழுத்திடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கோவை மார்க்கெட்டிங் துணைப் பொது மேலாளர் சண்முகராஜா ஹரி, அரசு தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் பிரிவு துறைத் தலைவர் தேன்மொழி, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அனில்குமார் பிள்ளை கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒரு சிறந்த பாலமாக இருக்கும். இதன் மூலம் அரசு கல்லூரியில் படிக்கும் சிவில் துறை மாணவர்கள் எங்கள் சிமெண்ட் உற்பத்தி ஆலையை பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவதோடு, அங்கு எவ்வாறு சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்த அனுபவ மற்றும் தொழில்நுட்ப அறிவு அவர்களுக்கு கிடைக்கும்.

மேலும், இந்த துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இது தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே மிகப்பெரிய ஆராய்ச்சி மையாகும். இது 40 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மையத்தில் புதிய கான்கிரீட் தொழில்நுட்ப வளர்ச்சியை மேற்கொள்ளுதல், நவீன கருவிகள் மூலம் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை சோதித்தல் உள்ளிட்ட பணிகளோடு சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்களுக்கு சிவில் இன்ஜினியரிங் துறையில் அவர்களின் சிந்தனை திறன் மற்றும் அறிவை மேம்படுத்த சிறந்த பேச்சாளர்களுடன் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படும்.

மேலும், இந்தியாவின் வருங்கால கட்டுமானதாரர்களாகிய அவர்களுக்கு எங்களின் புதிய தயாரிப்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...