மாணவர்களின் கல்விசார் திறனுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்‌ மற்றும் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்‌ இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

மாணவ ஆராய்ச்சியாளர்கள்‌ பரிமாற்ற திட்டத்திற்காக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்திடப்பட்டுள்ளது.


கோவை: மாணவ ஆராய்ச்சியாளர்கள்‌ பரிமாற்ற திட்டத்திற்காக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்திடப்பட்டுள்ளது.



முதுகலை மாணவர்களின்‌ கல்விசார்‌ திறனை வளர்ப்பதற்காக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, ஆஸ்திரேலியாவில்‌ உள்ள தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன்‌ மாணவர்‌ பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டுள்ளது.



பேராசிரியர்‌. முனைவர்‌ ரென்‌ யி, சார்பு துணைவேந்தர்‌ (பன்னாட்டு), தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்‌, தலைமையிலான உயர்மட்டக்‌ குழு, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 24.06.2022 அன்று இரண்டு பல்கலைக்கழகத்திற்கு இடையில்‌ “Cotutelle Program” (கூட்டு ஆராய்ச்சி பட்டப்படிப்பு) என்ற மாணவர்‌ பரிமாற்றத்‌ திட்டத்தைத்‌ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.



கூட்டு ஆராயச்சி பட்டப்படிப்பு திட்டத்தின் (Cotutelle Ph.D. Program) மூலம்‌ மாணவர்கள்‌ இரண்டு பல்கலைக்கழகங்களிலும்‌ ஆராயச்சி நடத்த இயலும்‌. இக்கல்விசார்‌ திட்டத்தை முடித்தவுடன்‌ மாணவர்கள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றிலிருந்து இரண்டு முனைவர்‌ பட்டங்களைப்‌ பெறுவார்கள்‌.

இதனால்‌ ஆஸ்திரேலியாவில்‌ இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள்‌ அதிகரிக்கும்‌. எல்லாவற்றிற்கும்‌ மேலாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, காலநிலை மாதிரியாக்கம்‌, வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ பயிர்‌ காப்பீடு ஆகியவற்றில்‌ தனது ஆராயச்சி திறனை வலுப்படுத்த இயலும்‌. மாணவர்‌ பரிமாற்ற திட்டம்‌ ஐந்தாண்டுகள்‌ தொடரும்‌ மற்றும்‌ 10 மாணவர்கள்‌ பயனடைவார்கள்‌ என்பது சிறப்பம்சமாகும்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...