கோவை TNAU-வில்‌ முதுகலை, முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை துவக்கம்..!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறைகளை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.



கோவை: TNAU-வில்‌ முதுகலை, முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 32-துறைகளில் முதுகலை படிப்புகளும், 28-துறைகளில் முனைவர் படிப்புகளும் உள்ளது.



இதில் 2022-23 வது கல்வியாண்டின் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான செயல்முறைகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.

இன்று முதல் வரும் ஆகஸ்ட்-8 வரை முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேளாண் துணை வேந்தர் கீதா லட்சுமி கூறும் போது:-



இன்று முதல் முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், இந்த முறை விண்ணப்பிக்க மாணவர்கள் Provisional certificate மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அக்கல்லூரி முதல்வர், அல்லது இயக்குநரிடம் கடிதம் பெற்று அதை கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படும், 27 ஆம் தேதி மாதிரி தேர்வும், 28 தேதி நுழைவுத்தேர்வும் நடைபெறும், மேலும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மாணவ சேர்க்கைக்கான இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, மூன்றாவது வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார். அதே போல் இந்த ஆண்டு முதுகலைக்கு 400 இடங்களும், முனைவர் படிப்புக்கு 200 இடங்களும் உள்ளது.

வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 19, 20 உலகளாவிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும் இதில் விவசாயிகள் நலன் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ள 100 மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்பு குறித்து சுருக்கமாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதில் தொழில் முனைவோர்களை கண்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்துடன் வேளாண் கல்லூரி காலநிலை மாற்றம் குறித்தான ஆய்வு மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், இதற்கு வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும், அதே போல அந்த விஞ்ஞானிகள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள் என தெரிவித்தார்.

அதே போல் முதல் முறையாக வேளாண் கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு வருடம் ஆஸ்திரேலியா பல்கலையில் படிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டு 2 மாணவர்கள் வீதம், 5-ஆண்டுகளுக்கு 10-மாணவர்கள் வெளிநாட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...